பக்கம்:தரும தீபிகை 4.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1290 த ரும தீ பி ைக fr தக்கமக்கு இயன்றவாறு கருமங்களைச் செய்து வந்தால் அவ் வழிகளால் செல்வங்கள் வந்து சேருகின்றன. மனிதன் செய்யும் தொழில்கள் தெய்வ ஒளிகளாய்த் தேசு மிகுந்து வருகின்றன. வினை செய்யா திருந்தால் அந் நேரம் வெய்யதாய் விளிந்து ஒழிகின்றது. மனிதனுக்கு அமைந்துள்ள வாழ்நாள் அருமை மிக வுடை யது. அதனைப் பழுதாகக் கழிப்பவர் பாழ்படுகின்றனர். ஒவ் வொரு கணமும் பொருளும் புகழும் புண்ணியமும் மணந்து வரும்படி புரிந்து வந்தால் அந்த மனித வாழ்வு பெரு மகிமை அடைகின்றது. உற்ற பொழுதை உயர்பயன் ஆக்கிவரின் கற்ற கலேயின் கரைகண்டான்---பெற்ற பிறவிப் பெரும்பயனேப் பெற்ருன் பெரிய அறவன் அவனே அறி. பொழுதைப் பழுதுபடுத்திப் பாழாக்காமல் அதனை விழுமிய செல்வமாக விரைந்து மாற்றிக் கொள்பவர் உயர்ந்த பாக்கிய வான்களாய்ச் சிறந்து திகழ்கின்றனர். இந்த வையக வாழ்வு சுகமாய் அமைய வேண்டுமாயின் அதற்குப் பொருள் அவசியம் வேண்டும். அதனே எவ் வழியும் செவ்வையாக ஆக்கிக் கொள்க. ஊக்கி முயலும் உறுதி நலங்களெல்லாம் பாக்கியங்க ளாகி வரும். ĒĻ ... ." si in r H - இதனே நோக்கி உணர்ந்து ஆக்கம் அடைக. வினை, விதி, கருமம், பால், ஊழ் என்னும் மொழிகள் மனி தனுடைய செயல்களிலிருந்து விளைந்து வந்துள்ளன. நல்ல குறிக் கோள்களோடு உள்ளம் துணிந்து முயலின் அசனல் செல்வங் கள் உளவாகின்றன. சிறப்புகள் சேர்கின்றன. "உத்யமஸ் ஸாஹலம் தைர்யம் புத்திசக்தி பராக்ரம: ஷடேதே யத்ர வர்த்தந்தே தத்ர தேவஸ்ள ஹாயக்ரத்." o 'முயற்சி, சாகசம், கைரியம், அறிவு, ஆற்றல், பராக்கிர மம் ஆகிய இந்த ஆறும் எங்கே இருக்கின்றனவோ அங்கே தெய்வம் துணை புரிகிறது” என்னும் இது இங்கே அறியவுரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/135&oldid=1326288" இலிருந்து மீள்விக்கப்பட்டது