பக்கம்:தரும தீபிகை 4.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ ச ல் வ ம் 129 | மனிதன் செய்கின்ற கருமம் தெய்வத்தின் பிரியத்தையும் செல் வத்தையும் அடைந்து கொள்ளுகின்றது ஆதலால் நீ கருதி முயன்று பெரிய திருவுடையனுகுக. செல்வம் பெறவேண்டின் செய்ய முயற்சியை வல்விரைந்து செய்க வருமதுவே-செல்வம் முயற்சியில் உள்ள முறைகெரியின் அன்றே உயர்ச்சி யடையும் உனே. வாழ்வின் உயிர் நிலை செல்வத்தில் உள்ளது; அந்தச் செல்வம் ஆள்வியிைல் அமர்ந்திருக்கிறது; இவ் வுண்மையை ஆர். ந்து சிந்தித்து எவ்வழியும் செம்மையாய் முயன்று நன்மைகளை நாடிக் கொள்ளுக. பொருளில் ஒருவற்கு இளமையும், போற்றும் அருளில் ஒருவற்கு அறனும்.--தெருளான் அறந்தாழும் நெஞ்சின்ை கல்வியும் மூன்றும் பரிந்தாலும் செய்யா பயன்." (திரிகடுகம்) செல்வமும் கல்வியும் அருளும் அறமும் மருவியுள்ள பொழுதுதான் மனித வாழ்வு புனிதமாய் மகிமையடைந்து மிளிர்கின்றது. இனிய நீர்மைகளையும் அரிய சீர்மைகளையும் உரிமையாக எய்தி உயர் இன்பம் பெறுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு செல்வம் உலக வா ழ்க்கைக்கு உயிர். சீவர்களை அது பேணி வரும். மனித வாழ்வை மாண்புறுத்தும். இனிய போகங்களை விளைக்கும். இன்ப நலங்களை ஈயும். புகழ் புண்ணியங்களை அருளும். முனிவரும் அதனை விழைவர். எல்லா மேன்மைகளும் அதனல் உளவாம். அது இல்லையானல் வாழ்வு இல்லை. அதனை இனிது தேடி இன்பம் பெறுக. டுன-வது செல்வம் முற்றிற்று. - _கக_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/136&oldid=1326289" இலிருந்து மீள்விக்கப்பட்டது