பக்கம்:தரும தீபிகை 4.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1322 த ரும தீ பி. கை மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிகின்று அழுத கண்ணிர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி சர்வதோர் வாள் ஆகும்மே. (3) - / (நறுந்தொகை) நீதிபதிகள் உணர்ந்து ஒழுக வேண்டிய போதனைகளை அதி வீரராம பாண்டியன் என்னும் மன்னன் இன்னவாறு போதித்தி ருக்கிருன். தனக்கு உண்மையான உரிமையை வழக்காளி இழந்துவிடின் அவன் வயிறு எரிந்து அழுதுபோவன்; போகவே அக்தப் பாவம் தீர்ப்புக் கூறிய அதிகாரியைப் பிடித்து அவனு டைய வழிமுறைக்கும் அழிகேடுகளைச் செய்கின்றது. 'வழக்குடையான் கிற்ப வலியானேக் கூடி வழக்கை அழிவழக்குச் செய்தோன்-வழக்கிழந்தோன் சுற்றமும் தானும் தொடர்ந்தழுத கண்ணிரால் எச்சம் அறும் என்ருல் அறு." (ஒளவையார்) மனக் கோட்டமுடையகுப் வழக்கை வழுப்படுத்தின் அவனது வமிச வழி அழியநேரும் என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். நியாயத் தீர்ப்பு பழுதுபடின் அகனல் விளையும் அழிவு நிலையை இது விழி கெரிய விளக்கியது. - உள்ளம் கோடாமல் எள் அளவும் மாருமல் யாண்டும் நேர் மையாய் நீதிமுறைகளைச் செய்து வருபவன் ஆதிபகவன் அருள் பெற்று அரிய உயர் நிலையில் ஒளிசெய்து மிளிர்கிருன். நீதிபதி யாயுலகில் கிலேயுயர்ந்த பதவியினில் நேர்ந்தமர்ங் தோன் வாதிகளின் முறைகளேயும் வழக்குகளின் கிலேகளேயும் வகையாய் ஒர்ந்து தி.துபதி யாதவகை எவ்வழியும் செவ்வையாய்த் தெளிந்து நோக்கி ஒதிவரு முறைபுரியின் உயர்நீதி பதியாகி ஒளிர்வா னன்றே. மருவிய பெயருக்கு மாசு கோாதவாறு தேசு புரிந்து ஒழுகி வரின் ஈசன் அருளை அவன் இனிகே அடைந்து கொள்ளுகிருன். தலைமையான பதவியைத் கனக்குக் கந்திருக்கிற கரும தேவகையின் உள்ளம் உவந்து கொள்ள உரிமையோடு நீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/167&oldid=1326320" இலிருந்து மீள்விக்கப்பட்டது