பக்கம்:தரும தீபிகை 4.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. கல்வி ச் செருக்கு l:33l உள்ளத்திற்கு அமைதியையும் அறிவுக்குக் தெளிவையும் உறுதியாக உதவி வருவதே கல்வியாம். அரிய பல அறிவின் பங்களை இனிமையாக அனுபவிக்கவுரிய கல்வியைச் செருக்கு வறிதே பாழாக்கி விடுகின்றது; விடவே அச்செருக்கன் வீன னப் இழிந்துபடுகின்ருன். செருக்கு என்னும் சொல் அகங்காரம், ஆணவம், மமதை, இறுமாப்பு, இடம்பம் : களிப்பு முதலிய இழி நிலைகளைக் குறித்து வருதலால் அகன் பழி கிலேயும் பாவமும் அறியலாகும். உயர் நலங்களை யெல்லாம் ஒருங்கே ஒழித்து எவ்வழியும் துயரங்களை விளைத்து நிற்றலால் செருக்கு ஒரு கொடிய தீமை என மேலோர் முடிவு செய்துள்ளனர். இந்த இழி கீமை இல் லாதவரே விழுமிய எல்லோராப் விளங்கி கிற்கின்றனர். செறிவு = அடக்கம், நிறைவு. சிறந்த அறிவுக்கு அடையாளம் நிறைந்த அடக்கம். உள் ளம் நெறியோடு அடங்கிய பொழுது அங்கே அதிசய மேன் மைகள் வெள்ளமாய் விரிந்து நிறைந்து நிற்கின்றன. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். (குறள், 121) அடக்கம் உடையவன் தேவனப் உயர்கின்ருன்; அஃது இல்லாதவன் பாவியாப் நரகத்தை அடைகின்ருன் என்னும் இது ஈண்டு எண்ணி புனரவுரியது. அடக்கத்தின் பெருமையும் அடங்காமையின் சிறுமையும் இதனுல் நன்கு தெரிய வந்தன. "கற்றறிவு குலமேன்மை கருணே பெரும் புகழ்செல்வம் கைம்மாறு எண்ணுது உற்றுதவு கொடை சீர்மை ஒழுக்கம்அருங் தவம் நியமம் உறவின் கேண்மை மற்றெதிரி லாத்திண்மை வாய்மைமிகுங் து.ாய்மைகுணம் வனப்பு யாவும் பெற்றிடினும் அடக்கமிலாப் பெருமிதத்தால் அத்தனேக்கும் பிழை யுண்டாமால்.” (மெய்ஞ்ஞான விளக்கம்) அடக்கமின்றிச் செருக்குவதால் விளையும் அழி கேடுகளை இது விழிகெரிய விளக்கி யுள்ளது. செருக்கு உள்ளம் புகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/176&oldid=1326329" இலிருந்து மீள்விக்கப்பட்டது