பக்கம்:தரும தீபிகை 4.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. க ல் விச் செருக்கு 1339 கல்வி யறிவு ஊற்று நீர்போல் எல்லேயின்றிப் பெருகி வருகி /றது. நூல்களை ஆராய்ந்து அறியுந்தோறும். மேலும் மேலும் புதிய புதிய அறிவுகள் அதிசயமாய்த் தோன்றுகின்றன. தோன் றவே முன்னேய அறிவு சின்னதாய்க் காணப்படுகின்றது. இன் னவாறே பின்னல் பெருகி வருந்தோறும் முன்னல் மருவியது அறியாமையாய் முடிகிறது. அறிதோறு அறியாமை கண்டற்ருல் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. (குறள், 1110) கல்விப் பொருளை அறியுங்கோறும் அறியாமை காணப்படு வது போல் அன்புடைய காதலியைத் தோயும் தோறும் இன்ப மும் ஆசையும் புதிது புதிதாய்ப் பொங்கி எ ழுகின்றன £7.7" or ஒர் காதலன் இங்ஙனம் ஆராமை மீதுளர்ந்து தனது அனுபோக அனுபவத்தை இனிது வெளியிட்டிருக்கிருன். கல்வி அறிவைக் கலவி இன்பத்திற்கு உவமைகறியிருக்கும்.அழகு உவகை சுரங்து திகழ்கின்றது. போகமும் போதமும் ஏகமாய் அறியவந்தன. அனுபவகிலேகள் துணுகி உணர வுரியன. செறிவோடு கற்றலாவது சாரமான கல்வியை ஆழமாய் ஆராய்ந்து தெளிந்து கொள்ளுதல். அரிய கல்வியிட்டம் உரிய நாட்டமாய் ஒர்ந்து கொள்ள வந்தது. கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல கினேக்கின் பிணிபல-தெள்ளிதின் ஆராய்க் தமைவுடைய கற்பவே நீர் ஒழியப் பாலுண் குருகிற் றெரிந்து.' (நாலடியார்,185) மனிதனுடைய வாழ்நாள் மிகவும் குறுகியது; கல்வி எல்லை யின்றி விரிந்துள்ளது. ஆதலால் அன்னப்பறவை நீரை நீக்கிப் பாலைப் பருகுதல் போல் நல்ல நூல்களைச் சாரமாக அவன் விரைந்து கற்றுக் கொள்ள வேண்டும் என இது உணர்த்தி புள்ளது. கலை பயில் இயல்பை இதில் கருதிக் கானுக. இவ்வாறு கற்றகல்வியை உயிர்க்கு ஊதியமாசி செய்து கொள்பவர் உத்தமராப் உப்தி பெறுகின்றனர். கல்வியால் பெற்ற அறிவை நல்லவகையில் பண்படுத்தாமல் உலக ஆடம் பரங்களில் செலுத்தி விண் பெருமை கொண்டு திரியின் அவர் மாண்பயன் இழந்தவராய் மடிந்து படுகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/184&oldid=1326337" இலிருந்து மீள்விக்கப்பட்டது