பக்கம்:தரும தீபிகை 4.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. செல்வத் திமிர் 1385 புல்லிய பொருள்களை கினைந்து செருக்கி உள்ளம் இழிந்து ள்ளவன் உயர்க்க பரம்பொருளின் அருளை இழந்து போகின் முன்; போகவே அவனுடைய நிலை பரிதாபமாய் இரங்க நேர் கின்றது. உற்ற செல்வத்தை உறுதியான நல்ல வழிகளில் பயன் படுத்தினவன் நலம் பல அடைந்து உயர்ந்து மகிழ்கின்ருன்; அங்ங்னம் செய்யாதவன் இழிந்து கழிகின்ருன். "முற்ருெடர்பில் செய்த முறைமையால் வந்தசெல்வம் இற்றைநாட் பெற்ருேம்என்று எண்ணுது பாழ்மனமே! அறறவாககும ஈயாமல அரனபூசை ஒராமல கற்றவர்க்கும் ஈயாமல் கண்மறந்து விட்டனேயே! (1) மாணிக்கம் முத்து வயிரப் பணிபூண்டு ஆணிப்பொன் சிங்கா தனத்தில் இருந்தாலும் காணித்து உடலோமன் கட்டியே கைப்பிடித்தால் காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே! (2) கற்கட்டு மோதிரம்கற் கடுக்கன்அரை ஞாண்பூண்டு திக்கெட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர்ஆலுைம் பற்கிட்ட ஏமனுயிர் பந்தாடும் வேளேயிலே கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே! (3) க்கத் தாயிருக்க வேண்டும யாள் இருக்கப் விடிருக்கத் தாயிருக்க ே டுமனே இரு பீடிருக்க ஊனிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக் கூடிருக்க நீபோன கோலம் என்ன கோலமே!’ (4) (பட்டினத்தார்) நிலையில்லாத பொருளில் மருள் கொண்டு நெஞ்சம் செருக்கி நில்லாதே; அதனை நல்ல நெறிகளில் உபகரித்து ஒல்லையில் உய்தி பெறுக என இவை உணர்த்தியுள்ளன. உடலளவில் ஒட்டியுள்ள தொடர்புகளில் மையல் மண்டி மருண்டு மடியாமல் உயிர்க்கு ஊதியத்தைச் செய்து கொள்ளுபவர் தெய்வ கதியை எ ப்து கின்றனர். உய்தி பெறுவதே எ ப்திய பிறவியின் இனிய பேரும். மெய்யை ஊன்றி புணரவே பொய்கள் பொன்றி மறை இன்றன. உறுதியான உய்தி நலங்கள் ஒன்றி வருகின்றன. உன் அறிவும் பொருளும் வலியும் நிலையும் சிறிய. ஒருவன் உரிமையோடு அறிய வுரிய உண்மைகளை இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/232&oldid=1326395" இலிருந்து மீள்விக்கப்பட்டது