பக்கம்:தரும தீபிகை 4.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1394. த ரு ம தீ பி ைக உண்ணும் உணவுகளைப் புனிதமாக ஒர்ந்து அளவா உண்டு வருகின்றவன் உணர்வு நலம் சிறந்து உறுதி வளம் படிந்து ஒளி மிகுந்து கெடிது வாழ்ந்து வருகிருன். மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லே உயிர்க்கு. (குறள், 945) உயிர் துயர் உருமல் சுகமாய் வாழ வேண்டுமாயின் உணவு நயமாயிருக்க வேண்டும் என இது உணர்த்தியுள்ளது. உயிருக் கும் உணவுக்கும் உள்ள உறவுரிமை இதல்ை உணரலாகும். மறுத்து உண் என்று தேவர் இதில் குறித்திருக்கும் ஏறிப்பு கூர்ந்து சிந்திக்கக்கக்கது. கண்ட உணவுகளையெல்லாம் ஆசை கொண்டு உண்டு விடாதே, பசியின் நிலை அறிந்து அளவாக உண்ணுக, அதனுல் ஆயுள் வளரும்; நோயின்றி வாழ்வாய்! என அருள் மீதுார்ந்து இக்கப் பொருள் மொழியைப் போதித்திருக் கிரு.ர். உணவின் உண்மையை ஒர்க்து உணர்க. துண்மை நுகரேல். பtதுரண் விரும்பேல். என ஒளவையார் இவ்வாறு அறிவு கூறியுள்ளார். நெறிமுறையான உணவுகளையும் அதிகமாக உண்ணலா காது, எதையும் இகமாகவே உண்ண வேண்டும் என்றதனுல் நெறிகேடானதை உண்டால் அதனுல் எவ்வளவு அவகேடுகள் உளவாம் என்பது எளிதே தெளிவாம். கள் என்பது அறிவைக் கெடுப்பது, வெறியைக் கொடுப் பது, அவலத் துயர்களை விளைப்பது ஆகலால் அதனே உண்பது பழி எனவும் பாதகம் எனவும் வந்தது. பஞ்சமா பாதகத்துள் ஒன்று. என்றது கள்ளின் தீமையை உள்ளி ч /6oогут. உயிரைத் Յ,/ Աரப் படுத்துகிற கொடிய தீமைகள் ஐக்கை ஒருங்கே தொகுக் துப் பஞ்சபாதகம் என மேலோர் குறித்து வைத்துள்ளனர். பஞ்சம் = ஐக்து. அழிகேடுகள்தொகையாப் விழிகெரிய வந்தன. கொலை, களவு, கள், காமம், பொப், என்னும் இந்த ஐக் தும் பஞ்ச மா பாதகங்கள் என்று எண்ணப்பட்டுள்ளன. மனித வாழவை நீசப்படுத்தி நெடுங் துயர் செய்யும் கடுங்கேடு கள் ஆதலால் இவை கொடும் பாவங்கள் ஆயின. =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/241&oldid=1326406" இலிருந்து மீள்விக்கப்பட்டது