பக்கம்:தரும தீபிகை 4.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. கள்ளின் களிப்பு 1407 பிழையான வழிகளில் பழகி வருவது பீழையாய்ப் பெருகி வருகிறது. பழிதுயரங்களுக்கு ஏதுவான இழி கள் ஆள அருந்து வது ஈனம் என்று தெரிந்தாலும் பழகிய பழக்கத்தை விட முடியாமல் அழி நிலைகளையே புரிந்து அவமானம் அடைகின் றனர். குடிகாரனே எவரும் மதியார்; குடிப்பவன் எவ்வழியும் இழிக்கவனகவே எண்ணப்படுகிருன். குடித்தபொழுது அவ ம்ைவெளிவர நானுகின்ருன். ஒதுங்கிப்படுத்துக்கொள்ளுகிருன். உயிரைக் கெடுப்பதை உண்ணுது ஒழிக. - -க 606. உணர்வை அழித்துள் உயிர்க்கேடு செய்யும் புணர்வில்ை கள்ளும் புலேயும்-கணமுடைய பாவமெனத் தள்ளிப் பழித்தார் பழிவிளைவை காவகம் கொள்ளல் நவை. (சு) இ-ள் உணர்வைக் கெடுத்து உயிர்க்கேடு செய்தலால் கள்ளும் புலாலும் கொடிய பாவங்கள் என இகழ்ந்து மேலோர் தள்ளி வைத்துள்ளனர்; அவற்றை காவில் உண்டால் நாசமாம் என்க. மனிதன் பலவகை நிலைகளில் உருவாகி வருகிருன். காரிய காரணக் கொடர்புகள் கூரிய சீரிய முறைகளில் கூடியுள்ளன. பிறப்பும் இருப்பும் படிப்பும் பழக்கமும் சிறப்பாக அமையின் அந்த மனிதன் சிறந்தவனப் வருகின்ருன்; அவை இழிவாய் இயையின், அவன் இழிந்தவனப் எழுகின்ருன். சுற்றியுள்ள சூழல்களாலும் பற்றியிருந்த பழைய வாசனைகளாலும் மனிதன் நல்லவன் ஆகவோ, அல்லவனாகவோ மருவிவருவது அதிசய மருமமாயுள்ளது. உள்ளம் படிந்தது உலகம் படிந்து வருகிறது. அறிவுக்குக் தெளிவும் உடலுக்கு ஆரோக்கியமும் தருகிற உணவுகளைத் தரம் கெரிந்து உண்டு வருகிறவர் உயர்ந்த புத்தி மான்களாய்ச் சிறந்த சத்துவ குணசீலராய் ஒளி மிகுந்து வருகின்றனர். உணவின் படியே உணர்வு விளைந்துள்ளது. பழங்களை உண்டு பாலைப்பருகுபவர் நிலைகளையும், மாமிசங் களைத்தின்று மதுவைக் குடிப்பவரது புலைகளையும் அனுபவத்தில் கண்டு வருகின்ருேம். உண்டு வரும் உணவுகளின் அளவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/254&oldid=1326420" இலிருந்து மீள்விக்கப்பட்டது