பக்கம்:தரும தீபிகை 4.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. ւլ ன் ைம 1429 ஆதாரமாயுள்ளமையால் அவை இயற்கையுரிமைகளாய் அமைங் தன. இந்தத் தொழில்கள் ஒழுங்காக நடக்கவும், உலகில் ஒரு வரை ஒருவர் கலியாதிருக்கவும் கலைமையாய் நின்று நாட்டை இனிது கடத்தவுரியவன் அரசன் என வந்தான். இந்த உலக ஆசைகளைத் துறந்து பரமனேயே கருதி எ வவுயிர் க்கும் அறிவு கலங்களைப் போதித்து யாண்டும் தண்ணளியுடை யனப் இதமே புரிந்து வருபவன் அந்தணன் ు వ్రైT அமைந்தான். அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்னும் இந்த நால்வரும் ஒரு குடும்பத்தில் பிறந்த நான்கு பிள்ளைகளைப் போல் உலகத்திற்கு உரிமையாய் அமைந்துள்ளனர். செயல் இயல்களால் இசைந்த இந்த நான்கு இனங்கள் உடன்பிறந்த துணைவர்போல் உரிமையுடன் மருவி ஒழுகிவந்தன. ஆதியில் அமைந்த இவையே என்றும் நீதியா யிருக்க வுரியன. இப்பொழுது இந்த நாட்டில் எத்தனை பிரிவுகள் கிளைத்து எழுந்துள்ளன! எவ்வளவு சாதிகள்! எவ்வளவு குலங்கள்! ஒத்த பிறப்பினனே இழிந்த சாதியான் என்று காழ்த்தித் தன்னை உயர்ந்த குலத்தவன் என்று காட்டிக் கொள்வதில் எத்தனை கபட நாடகங்கள் கடந்து வருகின்றன! குணம் செயல்களில் மிகவும் ஈனமா இருந்துகொண்டு தன்னை மேலான சாதியான் என்று செருக்கிநிற்பது எவ்வளவு மடமை எத்துணைச் சிறுமை! இந்தப் பித்த மயக்கங்களை உய்த்துணர வேண்டும். சாதிக் திமிரும் குலச் செருக்கும் மனிதருக்குள் பெரிய பிளவுகளை உளவாக்கி இந்த நாட்டைப் பாழ்படுத்தி யுள்ளன. சாதிப்பித்துகளால் இந் நாடு பிழைபட்டுள்ளதுபோல் வேறு எங்காடும் பிழைபடவில்லை. பிழைபாடு பெருங்கேடா யுள்ளது. வெப்ய சிறுமைகளை விளைத்து வைய மையலாய் வருகிற இந்தப் பொய்யான புலே மயக்கங்களை மெய்யறிவாளர்கள் வெறுத்து உய்தியை நாடி உருகியுள்ளனர். “சாதிகுலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனே அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதைகுணம்.பிறர்உருவம் யான் என தென்உரைமாய்த்துக் கோதிலமு தானுனேக் குலாவுதில்லை கண்டேனே.” (திருவாசகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/276&oldid=1326442" இலிருந்து மீள்விக்கப்பட்டது