பக்கம்:தரும தீபிகை 4.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1430 தரும தி பிகை மெய்யறிவு கோன்றி உய்தி பெற்றபோது சாதி குலம் என் லும் பொய்ப் புலைகள் எள்ளித் தள்ளப்படும் என்பதை இதல்ை உள்ளி உணர்ந்து கொள்ளுகிருேம். விளுன மயக்கங்களில் மனிதர் மருண்டு உழலுகின்றனர். அரிய பிறவியைப் பெற்றும் உரிய பயனே அடையாமல் வறிதே பாழ்படுகின்றனர். ஞான நோக்கம் இல்லாமையால் ஊன வழிகளில் ஈனமா யிழிய நேர்ந்தனர். ஆதிமூலப்பொரு ளோடு நேரே உரிமையாயுள்ள சீவனைத் தீது மூலங்களில் ஆழ்த் திப் பேதைகளாய் இழிவது பெரிய பாதகமாகிறது. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சங் கடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானிக் கலைகின்ற உலகீர்! அலைந்தலந்து வினேநீர் அழிதல் அழகலவே நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான கிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே விதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே. (1) சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் கணந்தேன். நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் ஆதியும் நடுவும் அங்கமும் எல்லாம் அருட்பெருஞ் சோதிஎன்று அறிக்தேன் ஒதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே. (அருட்பா) (2) சாதித் திமிர் சாராமல் ஆதிப் பொருளை அடையுங்கள் என உலக மக்களை நோக்கி இராமலிங்க சுவாமிகள் இங்கனம் பரிந்து கூறியிருக்கிரு.ர். அவருடைய பரிவுரைகள் ஆன்ம வுரிமைகள் சுரந்துள்ளன; அறிந்து அனுபவிக்கத்தக்கன. "நல்ல குலமென்றும் தீய குலம்என்றும் சொல்லள வல்லால் பொருளில்லேத்-தொல் சிறப்பின் ஒண்பொருள் ஒன்ருே தவம் கல்வி ஆள்வினே என்றிவற்ருன் ஆகும் குலம்.” (நாலடியார், 195) _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/277&oldid=1326443" இலிருந்து மீள்விக்கப்பட்டது