பக்கம்:தரும தீபிகை 4.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1440 த ரும தீ பி ைக ளார்; அடையாதவர் கடையரா யிழிந்து கடுங் துயரங்களில் உழலுகின்ருர். உரிய பயன் ஒழியவே ஊனங்களாயின. அழிந்து படுகின்ற உடலையே ஒம்பி அங்க அளவில் ஒழிந்து போபவர் இழிந்த மாக்களாய் எண்ணப் படுகின்றனர். உண்ணல் உறங்கல் உருளல் என்றது பசி இர உண்பதும், 부. றங்குவதும் மங்கையரோடு முயங்குவதும் மயங்குவதும் ஆகிய செயல்களிலேயே இழிந்து கழித்துவரும் வகைகளை உணர்ந்து கொள்ளவக்கது. உயிர்க்கு உரிய உறுதி கலங்களைக் கருதிக் கொள்ளாமல் வன விலங்குகள் போல் வறிகே திரிவது பழிபட்ட இழிவாழ்வு ஆதலால் அது செத்த வாழ்வேயாம். முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப உடுத்துண்ப உண்ணு---இடித்திடித்துக் கட்டுரை கூறின் செவிக்கொளா கண்விழியா கெட்டுயிர்ப்போடு உற்ற பினம். (நீதிநெறி விளக்கம்) கல்ல அறிவுரைகளைக் கேட்டு ஞான நிலையில் உயர்ந்து வாழாமல் ஊன உடலையே ஒம்பி உழல்வது ஈனமாம் என இது உணர்த்தியுள்ளது. உயர்ந்த உணவுகளை உண்டு, சிறந்த உடை களே அணிந்து, இனிய வாசனைகளைப் பூசி, அரிய மலர்மாலைகளைச் குடிப் பெரிய அரசவாழ்வில் இருந்தாலும் உரிய உணர்வுகுன்றி உயிர் ஊதியக்கை இழந்திருப்பின் அது பெரிய இழவேயாம். ஒக்கதை உணராமல் உண்டு களித்து வாழ்பவர் செத்த சவங்களே என்பது உய்த்துணர வந்தது. செத்த சவத்தில் மூச்சு இராது; ஒத்ததை உணராக இக்கப் பினத்தில் மூச்சு ஒடிக்கொண்டிருக்கும் ஆகலால் உயிர்ப்போடு உற்ற பினம் என்ருர். பயன் இழந்தபோது மனிதன் பாழாகின்ருன். உப்பிருந்த ஒடோ? ஒதியோ? உலாப்பினமோ? வெப்பிருந்த காடோ? வினேச்சுமையோ?--செப்பறியேன் கண்ணப்பருக்குக் கனியனே யாய்! கிற்பணியாது உண்ணப் பருக்கும் உடம்பு. (சிவநேசவெண்பா) பரப.னேப் பணியாது பருத்திருக்கும் உடம்பை இராமலிங்க அடிகள் இங்கனம் வெறுத்திருக்கிரு.ர். உயிர்க்கு எவ்வழியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/287&oldid=1326453" இலிருந்து மீள்விக்கப்பட்டது