பக்கம்:தரும தீபிகை 4.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1450 த ரும தீ பி ைக பொறுமை இனிய நீர்மையாப் இன்பம் கருகிறது; பொரு மை கொடிய தீமையாய்த் துன்பம் புரிகிறது. தன்னை யுடை யானைச் சிறுமைப்படுத்தி இருமையும் கெடுத்துவிடும் ஆதலால் பொருமை எவ்வளவு தியது என்பது எளிது தெளிவாம். இட்டுள்ள பெயரே அதன் புலேப் புன்மையை வெளிப் படுத்தி யுள்ளது. பிறருடைய செல்வம் முதலிய நிலைகளைக் கண்டு உள்ளம் பொருமல் அழன்று எள்ளல் புரிந்து கிற்கும் இழி நிலைக்குப் பொருமை என்று பெயர். மனிதனுடைய நல்ல உள்ளத்தைத் தீயது ஆக்கிப் பொல் லாக அழுக்காய் நீசப்படுத்தி வருதலால் பொருமைக்கு அழுக் காறு என்று ஒரு பேரும் வக்கது. உற்ற பெயரால் அதன் ஊன மும் ஈனமும் உணரலாகும். கோளுமை வக்கிரம் அழுக்காறு அவ்வியம் கூரம் என்பது பொருமையின் கூற்றே. (பிங்கலங்கை) பொருமைக்கு உரிய பரியாய நாமங்களைப் பிங்கலமுனிவர் இங்கனம் கூறியிருக்கிருள். கூரம், வக்கிரம் என்பன கூர்ந்து உணர வுரியன. செஞ்சம் புழுங்கி எரிந்து வஞ்சம்ாப் மாறுபடும் கிலைகளை நேரே விளக்கியுள்ளன. ஒத்த பிறரின் உயர்வு கலம் காணின் சித்தம் கனன்று சிறுமையாய், என்றது பொருமையின் உருவகிலேயை உணர்த்தி நின்றது. தன்னுடைய கலங்களையே கருதி வருவது மனிதனிடம் இயல்பாப் மருவியுள்ளது. கன்னேவிடப் பிறன் உயர் நிலையை அடைந்தான் என்று கானும் பொழுது தன்க்கு ஏதோ சிறுமை நேர்ந்ததாகக் கருதி மறுகுகிருன். அந்த மாய மயக்கம் திய இயக்கமாய்த் திரண்டு வருகிறது. உள்ளம் பொருத அப் புன் மை பொருமையாப்ப் பொங்கி எழுகின்றது. அதனல் பழி மொழிகளும் அழி கேடுகளும் விளைகின்றன. விளையவே மனித சமுதாயத்தில் எவ்வழியும் இழி துயரங்கள் பெருகி ஈனங்கள் விரிந்து நிற்கின்றன. அன்னியற்கு அறிவுருவு ஆக்கம் கண்டு கேடு உன்னி உட்பொருமையாம் உருவினேன் உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/297&oldid=1326463" இலிருந்து மீள்விக்கப்பட்டது