பக்கம்:தரும தீபிகை 4.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. பொருமை 1459 வான் என்பதை ஒர் அனுபவ உவமையால் இது உணர்த்தியுள் óᎢ Ꮿal • காளும் கண் டுவரும் காட்சி கருதி யுனைய வந்தது. தியைக் கொண்டிருப்பது தீக்கொள்ளி என அமைந்தது. திக்குச்சி என்னும் வழக்கு இக் காலத்தில் வழங்கி வருகிறது. எண்ணம் தீமை ஆயபொழுது அந்த மனிதன் தீயவன் ஆகின்ருன்; ஆகவே அழிவும் துயரும் அவனைச் சூழ்ந்து கொள் ளுகின்றன. அங்க அல்லல் நிலையிலிருந்து மீள முடியாமல் அவல மாய் அவன் அழிந்தே போகின்ருன். தம் போக்கை உணர்ந்து திருந்தாமல் புலையாய் இழிந்துழல்வது புலன்கெட்ட மாக்களின் கிலையாப்த் தொடர்ந்து கெடிது நீண்டு வருகிறது. உள்ளம் கெட்டவன் உயிர்க் கேடனப் உழலுகின்ருன். பிறர்மேல் பொருமை மண்டித் தன் நெஞ்சம் கனஅம் போது அந்த மனிதன் தியுள் விழ்ந்தவனப் மாய சேர்கின்ருன். தன்னுடைய அழிவு நிலையை அறியாமல் கழிமடையனப் அவன் பழி துயரங்களில் இழிவது பெரிய பரிதாபமாயுள்ளது. தீக்குச்சியை உறைத்தவுடனே முதலில் அதுவே பற்றி எரிந்துபோகிறது. அயலாருடைய விட்டையோ, படப்பையோ கொளுக்க வேண்டும் என்று கருதி உறைத்த தீக்குச்சி முன்ன தாக அதுவே முடிந்து அழிந்து படுகின்றது; அதுபோல் பிறர் கேடு எண்ணுகிற பொருமையாளனும் முன்னுற அழிந்தே போகின்ருன். உவமையை விழியூன்றி உணர வேண்டும். கன் அழிவுக்குத் தானே காரணன் ஆதலால் அழுக்காருளன் எவ்வ ளவு அபாய நிலையிலுள்ளான் என்பதை எளிதே அறிந்து கொள் 6YT&n))/T Fr) அழுக்கா றுடையார்க்கு அ.துசாலும் ஒன்னர் வழுக்கியும் கேடீன் ப.து. (குறள், 165) பொருமை யுடையவர்க்கு வேறுபகைவர் வேண்டியதில்லை; அதுவே அவர்க்கு எவரும் செப்யமுடியாத கேட்டை விரைந்த செப்து விடும் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ளார். பொருமை அழி கேடுடையது; அதனே ஒழிய விடுக பகங்கங்ாங்கக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/306&oldid=1326472" இலிருந்து மீள்விக்கப்பட்டது