பக்கம்:தரும தீபிகை 4.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1482 த ரும தீ பி. கை கொள்ளுகிருன். பிறரும் அவன்பால் மதிப்பும் மரியாதைகளும் புரிந்து இனியராய் ஒழுகி இதமுடன் மருவுகின்ருர், ஒருவன் கோபத்தை அடக்கிக் குணம் புரிந்துவரின் அவ குல் பலரும் திருந்திப் பயன்படிந்து வருகின்ருர். அவன் சின ந்து சீறின் அயலாரும் சினந்து சீற நேர்கின்ருர். அதல்ை பகை யும் துயரும் சினமும் சீற்றமும் எங்கும் பொங்கி எழுகின்றன. இமை தீமையை வளர்த்து வருதலால் யாண்டும் தீயவர்கள் நீண்டு பெருகுகின்ருர். இந்த அவலக் கேடுகளால் அந்த நாடு தாழ்ந்து கைந்து படுகின்றது. கோபம் எந்த வழியும் இடரே தரும். யார் மீது செலுத்தி லும் அல்லலே வரும். தன்னினும் வலியார் மீது சினந்தால் அவர் ஒல்லையில் அல்லல் புரிந்து அடக்கி ஒழிப்பர், மெலியவை வெகுண்டு சீறில்ை அவர் உள்ளம் நொந்து வருந்துவர்; அகன. பாவமும் பழியும் விளையும். ஆகவே எவ்வகையிலும் அல்லவே தருதலால் கோபம் பொல்லாத தீயது என்று நல்லோர் எல்லோ ரும் அதனை அஞ்சி அகன்றுள்ளனர். செல்லா இடத்துச் சினம் தீது; செல்லிடத்தும் இல்லதனின் தீய பிற. (குறள், 802) எளியவர் வலியவர் எவரிடமும் கோபத்தைச் செலுக்கலா காது; செலுத்தினுல் கோடிய தீமைகளே விளைந்து வரும் எனக் தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். கன் கோபம் செல்லும் இடத்தே மனிதன் துள்ளி எழுகிருன், செல்லாத இடத்தில் அடங்கி நிற்கிருன். செல்லாக் கோபம் பொறுமைக்கழகு என் லும் பழமொழியும் வந்துள்ளது. அங்க இருவகையும் ஒரு தொகையாய் இதில் அறிய வந்தன. பெரியவர் தம்மைக் காய்ந்தான் பிறங்கல் கல்லியகோல் ஒப்பான் புரிவன புரியப் பட்டு புலம்புவன் ஒத்தார்க் காய்ந்தான்; எரிநர கதனில் விழ்வன் இழிந்தவர்க் காய்ந்தான் என்ருல் ஒருவர்தம் இடத்தும் சீற்றம் உருமையே கன்று மாதோ. (பிரபுலிங்கலிலே) தன்னினும் வலியாரைச் சினந்தால் கல்லில் முட்டியவன் போல் கடுந் துயர் அடைவன்; ஒத்தவரைக் காய்ந்தால் அவர் உடனே அல்லல் இழைப்பர்; மெலியவரைச் சினந்தால் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/329&oldid=1326495" இலிருந்து மீள்விக்கப்பட்டது