பக்கம்:தரும தீபிகை 4.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1486 தரும பிே கை வருதலால் அவர் திவ்விய மாட்சிகளை எய்திச் செவ்விய காட்சி களைப் பெறுகின்ருர். தியது மாயவே கல்லவை யாவும் திரண்டு வருகின்றன. அது மாயாது நின்ருல் ஒயாத துன்பங்களாம். அத் தீ வளர்த்தோர் செத்தவரே யாவர். கோபம் ஆகிய தீயை வளர்த்த வரின் உயிரோடு இருக்கா லும் அவர் செக் கவர் நிலையையே எ ப்திச் சீரழிந்து ஒழிகின்ருர். சினத்தால் அறிவு பாழாப் அவலம் பெருகி வருகலால் அவர் இருப்பு இறப்பினும் இன்னதாயிழிக்கப்பட்டது. இறந்தார் இறந்தார் அனேயர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துனே. (குறள், 310) சினத்தில் மிகுந்தவர் செத்தவரே யாவர்; அதனை ஒழித்த வர் என்றும் அழியாக கித்திய நிலையினரே என இது உணர்த்தி யுள்ளது. இறக்கல்= வ ம்பு மீறி மிகுதல். கழிசினம் பழிதுயரங் களாய் அழிவே கரும்; அவ்வாறு அழிந்து போகாதீர்; தெளிந்து வாழுமின்! எனத் தேவர் இவ்வாறு கருணையோடு போதித்துள் ளார். புனித போதனை புண்ணிய சாதனமாய் நின்றது. சினத்துக்கு இடம் கொடாமல் மனத்தைப் பண்படுத்தி வாழ்ந்து வரின் மகிமைகள் பல சூழ்ந்து வருகின்றன. 635. பாபம் பழிவளர்த்துப் பாவியெனப் பேர்விளைத்துத் தாபம் மிகச்செய்யும் சண்டாளக்-கோடமெனும் தீயோனைக் கூடாதே தேர்ந்தறிந்து மெய்யுணர்வாம் துரயோனைக் கொள்க துனே. (டு இ-ள் பாவம் பழிகளை வளர்த்து உன்னைப் பாவி ஆக்கிக் கோபம் கொடியதுயரங்களைச் செய்யும், சேமான அத்தீயவனைச் சிறி தும் அனுகாதபடி விலக்கி மெப்யுனர்வாகிய தாயவனைத் துணைக் கொள்க என்பதாம். புகழும் புண்ணியமும் அதிசய செல்வங்கள். சீவர்களைத் திவ்விய நிலைகளில் உயர்த்துகின்றன. அவற்றை அடைந்து கொள்வதே உயர்ந்த பிறவிப் பயன் என மேலோர் கருதியிருக் கின்றனர். தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுது எந்த மனிதனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/333&oldid=1326499" இலிருந்து மீள்விக்கப்பட்டது