பக்கம்:தரும தீபிகை 4.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1508 த ரும தி பி கை வரும் மனிதன் சிறந்தவனப் உயர்த்து வருகிருன், மனம்போன படி அலேந்து திரிபவன் இழிக்க விலங்காய்க் கழிந்துபடுகிருன். பகுத்து நோக்கும் அறிவு மனிதனுக்கு உரிமையாய் அமைங் திருக்கிறது. சன்மை தீமைகளை நாடி அறிந்து நல்ல வழியில் செல்லவே மனிதன் கடமைப்பட்டிருக்கிருன். சென்ற இடத்தால் செலவிடா திதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு, (குறள்,433) மனிதனுடைய நல்ல அறிவுக்குப் பயனேகாயனர் இவ்வாறு அறிவுறுத்தியிருக்கிருர் இமைகளை நீக்கி தன்மையான வழிகளில் மனத்தைச் செம்மையாகச் செலுத்துவதே அறிவு என்ற களுல் அவ்வாறு செய்யாதது அறிவு ஆகாது என்பது பெறப்பட்டது. அறிவின் மேல் வைத்துக் கூறியுள்ள விநயம் துணுகியுணரவுரி ப.து. அறிவுடைய மனிதனே நேரே நோக்கிக் கூருமல் அறிவுக்கு இலக்கணத்தை விளக்கியருளினர். இத்தகைய அறிவையுடைய வனே அறிஞன், மற்றவன் மடையனே என்பது உப்த்துனர. இயல்பு குன்றிய பொழுது மனிதன் மாடா யிழிந்து கிற்கிருன், அறிவின் காட்சி அளவே மனிதன் மாட்சி அடைந்து வருகிருன். குதிரையை அடக்கி கடத்தும் விரன் போல மனத்தை வசமா நடத்திவரின் அக்த மனிதனுடைய வாழ்வு மாண்பு சுரந்து மகிமை கிறைந்து புகழும் இன்பமும் பொலிந்து திகழ்கின்றது. மனம் வேகமாப் எதிலும் விரைந்து செல்லும் இயல்பினது; அதனே நல்ல வழியில் திருப்பிவிடின் சன்மைகள் விளைந்துவரும் ஆதலால் அச்செயல் உயர்ந்த மகிமையாப் வியந்து புகழவந்தது. “A man's nature runs either to herbs or weeds; therefore let him seasonably water the one, and destroy the other.” - (Bacon) 'மனிதனுடைய சுபாவம் கல்லதிலும் செல்லும் கெட்டதி அலும் ஒடும்; ஆகவே கெட்டதைத் தடுத்து கல்லவழியில் அதனை அவன் செலுத்தவேண்டும்’ என டேக்கன் என்னும் ஆங்கிலப் புலவர் இங்கனம் கூறியிருக்கிருர், - - * தீது ஒரீஇ கன்றின்டால் உய்ப்பது அறிவு என்னும் திருக் குமட் கருக்கோடு இது இத்திருக்கல் உய்த்துணரத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/355&oldid=1326521" இலிருந்து மீள்விக்கப்பட்டது