பக்கம்:தரும தீபிகை 4.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் | 5 || 3 பெண் மையல் மண்டிக் காமனுக்கு அடிமைகளாய் உலக மக்கள் கடைப்பட்டுள்ளனர். இழிந்த இந்த மாயமோகிகளோடு நான் யாதும் சேரேன், பரமனையே கூடிப் பரவசமாயுள்ளேன் என்று குலசேகர ஆழ்வார் இங்ங்னம் கூறியுள்ளார். தமக்கு உரிமையாய் அமைந்துள்ள அரசபோகங்களை யெல்லாம் அடி யோடு வெறுத்துப் பரமநீர்மையில் இந்த அரசர்பிரான் திளைத் துள்ளமை இங்கே சிந்தித்து உணரத்தக்கது. நிலையான அதிசய இன்பத்தில் தோய்ந்தவர் புலையான புன்போகங்களை அருவருத்து வெறுத்து அகன்று போகின்றனர். + சிற்றின்பம் சின்னிர தாயினும் அஃதுற்ருர் மற்றின்பம் யாவையும் கைவிடுப--முற்றுந்தாம் பேரின்ப மாக்கடல் ஆடுவார் விழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில். (நீதிநெறிவிளக்கம், 88) பேரின்பம் ஆகிய அமுகக்கடலில் திளைப்பவர் சிற்றின்ப மாகிய பாழ்ஞ்சேற்றில் விழார் என இது விளக்கி யுள்ளது. நித்திய அகித்தியங்களையும் உயர்வு இழிவுகளையும் உய்த் துணர்ந்து தெளிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனிடம் அமைந் திருக்கிறது. விக்ககமுடைய அந்த விவேகத்தால் மோகமயக் கங்களை வென்று மேலான கதியை அடைந்து கொள்ள வேண் டும். அவ்வாறு பெறவில்லையானுல் எவ்வாற்ருனும் உய்தியின்றி யாண்டும் அல்லல் அவலங்களே கோய்ந்து அவன் அலமந்து உழலுகின்ருன்; உழலவே பிறவிகளிலும் பரிதாபங்களே விரி கின்றன. அரிய வசதிகள் வாய்த்தும் உரிய பயனை எ ப்தாமல் ஒழிபவர் பெரிய பேதைகளாய்ப் பிழைபட்டுள்ளனர். 'தெரிவுறு வயதில் வந்த புந்தியால் சித்தம் தன்னைப் பரிகரி யாது விட்டால் பரிகரிப்பது மற்று எந்நாள்? விரிவிடம் விடம தன்று; விடயமே விடமாம்; துன்பம் புரிவிடம் கொல்வது ஒர்மெய் புலன்மறு பிறப்பும் கொல்லும்.' (வாசிட்டம்) தெளிந்த அறிவை அடைந்துள்ள மனிதன் இழிந்த இச்சை களை அடக்கித் தகுந்த பருவத்தில் உயர்ந்து கொள்ளவில்லையா குல் பின்பு உப்தி பெறமுடியாது; விடயபோகங்கள் விடத்தி லும் கொடியன; ஒரு பிறவியில் பற்றிய நசை பலபிறவிகளிலும் கொடர்ந்துபடுதுயரங்களைவிளேக்கும் என இது உணர்த்தியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/360&oldid=1326526" இலிருந்து மீள்விக்கப்பட்டது