பக்கம்:தரும தீபிகை 4.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1521 படிந்து வருவதைப் பார்க் துக் களித்து மடிந்து படுதல் மடம். இதனை ஈண்டு நினைந்து சிங்திக்க வேண்டும். காமவெறிகளை விரித்துக் காட்டிக் கங்கள் சேமலாபங்களை விளைத்து நீட்டிப் பலவகையிலும் பலர் இந்நாட்டை நிலைகுலைத்து வருகின்றனர். சீரழிவு ஒரளவு தெரிந்தாலும் பேரிழவிலேயே பெரு மையலாப் மக்கள் பெருகி . ழலுகின்றனர். சினிமாவில் மனித இனம் மாவாய் வருகின்றது. உண்மை உணர்வு தெளிந்து உய்தி பெற ஆண்டவன் தான் அருள் புரிய வேண்டும். - ------- 646. காமம் கடிந்த அளவே கதிநிலையின் சேமம் படிந்து திகழுமால்-கேமம் படியாத வாழ்வு பழிதுயர மாகி விடியா தழிந்து விடும். (சு) HH இ-ள். உள்ளத்தில் காம இச்சை ஒழிந்த அளவே உயிர் சேமம் அடைந்து சிறந்து விளங்கும்; நல்ல நெறி நியமம் தோயாத வாழ்வு பொல்லாத பழிதுயரமாயிழிந்து அழிந்து போம் என்க. உயிர்க்கு இனிய நிலையமாய் அமைந்துள்ள உடலை யாவ ரும் உரிமையோடு பேணி வருகின்றனர். இந்த உடம்பைப் பெற்ற பயன் உயிர் துயர் நீங்கி உயர்ந்த கதியை அடைந்து கொள்வதேயாம். சீலம் தவம் விரதம் முதலிய நெறி நியமங் களோடு ப்ழகி வரும் அளவே விழும்பிய மேன்மைகள் மருவி வருகின்றன. புலன்களை அடக்கி இனிய நீர்மைபோடு நியம மாப் வாழ்ந்து வருபவர் அரிய பல நன்மைகளை அடைந்துகொள் ளுகின்றனர். நெறி நியமமான அங்க வாழ்வை இழந்தவர் உயர்க்க பேறுகளை அடைய முடியா ல் இழிந்து நிற்கின்றனர். அருங்கல் பொருந்தல்களாகிய தேக போ க ங் க ளே யே விழைந்து நுகர்ந்து பல காலமும் பழகி வந்திருத்தலால் அங்க வாசனை வயமாய் உழந்து சுழன்று சீவர்கள் ஊசலாடி வருகின் றனர். பாச பந்தங்கள் பழிவழிகளில் செலுத்தி அழிதுயர்களைச் செய்கின்றன. வெய்ய மையல்களாப் அவை விரிந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/368&oldid=1326534" இலிருந்து மீள்விக்கப்பட்டது