பக்கம்:தரும தீபிகை 4.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1530 தரும பிே கை மேகலையைக் கண்டான்; காதல் மீக்கொண்டான். பேரழ குடைய அப் பருவமங்கை உலக வாழ்வை வெறுத்துத் துறவு நிலையில் உள்ளம் பதிந்து கின்ருள் ஆதலால் அரசகுமாரனுடைய இச்சைச்கு இசையாமல் அறிவு கலங்கள்கூறி இதமாய் ஒதுங்கி யிருந்தாள். இவன் விடாமல் தொடர்ந்து அவளை விழைந்து வங் தான். துறவிகள் வாசம் செய்கிற அழகிய சோலையுள் தனியே ஒரு ஆச்சிரமத்தில் அவள் தங்கி யிருந்தாள்; அங்கே இவன் சென்ருன். வெளியே எங்கும் எளிதில் செல்லாத இராசகுமா ரன் காம வெறியால் எதையும் கருதாமல் ஒளிவாய் எவ்வழியும் கடந்து அன்று விரைந்து போனன். 'சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழிஇ நிறையும் உண்டோ காமம் காழ்கொளின் செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென வவ்விய நெஞ்சமொடு அகல் வோன்' (மணிமேகலை உள்ளத்தே காமவெறி கொண்ட உதயன் மணிமேகலையை காடிச்சென்ற நிலையைச் சாத்தனர் இங்கனம் வார்த்துக் காட்டி யிருக்கிருர். வெள்ளம் கரையை உடைத்து வெளியே விரைந்து போனதுபோல் இவன் நிறை கடந்து சென்ருன் என்றகளுல் நிலைமை நீர்மைகளைக் கூர்மையாக உணர்ந்து கொள்ளுகிருேம். மாலையில்போப் அச் சோலையுள் புகுந்தான். மணிமேகலையை அணுகி மயலோடு நின்ருன். மன்னன் மகனைக் கண்டதும் அவள் மறுகி இரங்கி மதிநலம் உரைத்தாள். இழிந்த இச்சையை ஒழித்துவிடுக; ஊன உடலின் நசையால் ஈன வசையே விளையும்; இளமையும் எழிலும் விரைவில் மாறும். அழகி என்று மயங்கு வது அவலமேயாம். பெண்மயக்கு என்பது கண் மயக்கே. “பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்துத் அாசினும் மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சம் தெரியாய் மன்னவன் மகனே!” (மணிமேகலை) என இவனது நெஞ்சம் தெளிய அவள் நீதிகள் புகன்று அயலகன்ருள். இவன் மயலோடு மீண்டான். மீண்டவன் இரவு கண் உறக்கமின்றிக் கடுந்துயருழந்தான். நடுச் சாமத்தில் எழுந்தான். அந்த அழகியை எப்படியாவது கழுவி மகிழவேண் டும் என்று களி மீதுார்ந்து விரைந்து வந்தான். இடையே அங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/377&oldid=1326543" இலிருந்து மீள்விக்கப்பட்டது