பக்கம்:தரும தீபிகை 4.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1208 த ரும தீ பி. கை தும் இல்லாத தவசிகள் வாழ்வு எவ்வளவு சுவையுடைய காப் ஒளி பெற்று உயர்ந்து மிளிர்கிறது! “Poverty is its ornament. It does not need plenty.” (Emerson) "வறுமை அதன் னிெ அதிகமான வசதிகளை அது விரும் பாது' என உண்மையான பெரியோர்களுடைய வாழ்க்கை கிலேயைக் குறித்து எமர்சன் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். சூழ்வில் எளிமை துணைக் கொள்க! என்றது வாழ்வில் சுகமும் தெளிவும் மருவி வருகற்கு வழி யை விழிகாண இது விளக்கி நின்றது. சூழ்வு = சூழ்ந்துள்ள நிலை. தன்னச் சுற்றியிருக்கும் சூழல்களைச் செவ்வையாக ஒழுங்கு செய்து கொள்ளின் அந்த மனிதனுடைய குடி வாழ்க் கை எவ்வழியும் இனிமை சுரந்து வரும். குடியிருப்பு உணவு உடை முதலிய தேக வசதிகளை வினே பெருக்கி விரிக்காமல் வேண்டிய அளவு சுருக்கிப் பழக்கிக் கொள்ளின் பாண்டும் தன்மையாம். தேவைகளை வளர விடின் அவை கொடிய சுமைகளாய்க் GES كانوا கேடு செய்யும். குடும்ப பாரம் என உலகில் வழங்கி வரும் சொல்லால் அதனைப் பாதுகாத்து வருவது எ வ்வளவு கடினம் என்பது எளிது தெளிவாம். 'குடும்ப பாரத்தை விவேகிகள் கடக்கும் கொள்கைபோல் பாலையைக் கடந்து. (ஞானவாசிட்டம்) ஒரு அரசன் குதிரையேறிப் பெரிய பாலைவனத்தைக் கடந்து போன கிலேயை இவ்வாறு குறித்திருக்கிரு.ர். குடும்பம் காங்கும் இடும்பைகளே இகளுல் அறிந்து கொள்ளலாம். இயல்பாகவே இவ்வாறு சுமையான குடும்ப வாழ்வை இதமாகவும் இனிமையாகவும் நடத்தி வருவது பெரிய கலையாம்; அரிய விருபமாம். * ஆடம்பரமில்லாத எளிய வாழ்வு இனிய ஞான நீர்மையாய் மருவி வருகிறது. ஆன்ம சிந்தனை மேவிய உயர்ந்த குறிக்கோள் களோடு தோய்ந்து வருகிற வாழ்க்கை சிறந்த மகிமையாய்த் கேசு மிகுந்து திகழ்தலால் அதனை யாவரும் வியந்து புகழ்கின்ற னர். அது அரிய மகான்கள் வாழ்க்கையாயுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/53&oldid=1326206" இலிருந்து மீள்விக்கப்பட்டது