பக்கம்:தரும தீபிகை 4.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1250 த ரும தி பி ைக அரசனேயும்கலைஞனையும் ர்ே தாக்கி நோக்கிக் காரணங்களைக் குறித்துக் காட்டி ஒளவையார் இவ்வாறு உறுதி கூறியிருக்கிரு.ர். வித்வத்வஞ்ச நிருபக்வஞ்ச கைவ துல்யம் கதாசக ஸ்வதேசே பூஜ்யதே ராஜா வித்வாங் சர்வத்ர பூஜ்யதே." :தன் தேசத்தில் மாத்திரம் அரசன் மதிக்கப் படுகிருன்; வித்துவான் எல்லா இடங்களிலும் போற்றப் பெறுகிருன்; ஆக லால் புலவனுக்கு அர சன் எவ்வகையிலும் ஒவ்வான்’ இ இT இது உணர்த்தியுள்ளது. பொன்அணியும் வேந்தர் புனேயாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்ருெவ்வார்-மின்னுமணி பூனும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனேயாக் காணும்கண் ஒக்குமோ காண். (நன்னெறி, 40) முத்துக் கடுக்கன்களும், பொற்கடகங்களும், வயிர மோதி ரங்களும் அணிந்திருந்தாலும் காதும் கையும் விரலும் கண்ணுக்கு ஒப்பாகா, அது போல் செல்வம் மிகப் பெற்றிருந்தாலும் பாதும் இல்லாத கல்விமானுக்கு அரசர் நிகராகார் எனச் சிவப்பிரகாசர் இங்ஙனம் சுவையாக விளக்கி யிருக்கிருர். உவமையின் நயம் ஊன்றி உணருங் தோறும் உவகை சுரங்து வருகிறது. உடலுறுப் புக்களுள் கண் சிறந்துள்ளது போல் உலக மக்களுள் கலைஞர் சிறந்துள்ளனர். அரசர் சிரசா அருங்கலைஞர் கண்ணுப் பரசும் உலகம் பணிந்து. கண் காட்டிய வழியே கால்கள் நடக்கின்றன; கலைஞன் காட்டிய வழியே ஞாலம் இயங்குகின்றது. கவிஞர் உணர்வொ ளிகளை அருளி வருதலால் உலகம் அவ்வழியே ஒழுகி வருகிறது. “Poets are the unacknowledged legislators of the world.”(Shelly) :கவிஞர்கள் உலகத்திற்குச் சட்டம் விதிக்கின்ற தனியான நீதி கருத்தர்கள்' என ஷெல்லி என்னும் ஆங்கிலக் கவிஞர் சொல்லியுள்ள இது இங்கே உள்ளி யுணர வுரியது. வெளிப்படையாய் நின்று ஆரவாரமா உலகத்தை நடத்தி வருகிற لَهُ [نئے சரையும் கவிஞர் அடக்கமாயிருந்து அதி விநயமா அறிவுறுத்தி இனிது கடத்தி வருகின்ருர், குடிதழி இக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு. (குறள், 544)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/95&oldid=1326248" இலிருந்து மீள்விக்கப்பட்டது