பக்கம்:தரும தீபிகை 4.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* ஜம்பக்கேமாம் திகாரம் ஐமபததேழாம அதகார .ெ ச ல் வ. ம். -- அஃதாவது உலக வாழ்க்கைக்கு இனிய ஆதாரமாயுள்ள பொருள். கல்வியும் செல்வமும் கண் என முன்னம் சேர்த்து எண்ணப்பட்டமையின் அந்த இனவுரிமை கருதி அதன் பின் இது வைக்கப் பட்டது. இரு பெருந்திருவும் ஒருவருக்ககையன. o ■ f ■ e i. 561. இவ்வுலக வாழககை இனியபொரு ளாலியங்கும் செவ்வி தெரிந்து செயல்தெளிந்தே-எ வ்வழியும் பொன்னே வளர்த்துப் புகழ்பெறுக போற்றினர் தன்னை வளர்க்கும் கழைத்து. (க) இ-ள் இந்த உலக வாழ்வு பாண்டும் பொருளால் இய்ங்கி வருகி 20.து; அங் கிலேமையை உணர்ந்து தெளிந்து எ வ்வழியும் பொருளை வளர்த்துப் புகழ் மிகப் பெறுக; கன்னே உரிமையோடு பேணி வருவாரை அப் பொருள் பெரு பை யாக உயர்த்தி வரும் என்க. செல்வம், பொருள், பனம் என்னும் மொழிகள் மனிதனு டைய செவிகளில் விழும் பொழுது உவகைகளை விளைத்து வரு கின்றன. கேள்வியைச் செவிச் செல்வம் என்ருர் 凸凸 யனர். அறி வுக் கேள்வி நல்லது, அதனை நாளும் நயந்து கேளுங்கள் என்று 2_ ଈ) 3s மக்களுக்குச் சொல்ல வந்தவர் செல்வம் என இவ்வாறு புனேந்து சொல்லியது நினைந்து சிந்திக்க வுரியது. தான் எவ்வழி யும் ஆவலோடு விழைந்து தேடுவது ஆதலால் அந்தப் பெயரால் சொன்னல் மனிதன் சிங்தை யுவந்து செவி சாய்த்துக் கேட் பான் என்று கருதி இந்த வண்ணம் இசைத்தருளினர். செல்வமே! சிவபெருமானே! என ஈசனே நோக்கி மாணிக்க வாசகர் இவ்வாறு அன்பால் உருகி இன்பாகக் கூவி யிருக்கிரு.ர். திருச்சேந்தூர்ச் செல்வா! என முருகக் கடவுளைப் பகழிக்கூத் தர் இப்படி உவந்து பாடியிருக்கிருர், செல்வம் என்னும் சொல் எவ்வளவு இனிமையும் மகிமையும் உடையது என்பது இதல்ை இனிதுபுலனும். கடவுளும் செல்வம் எனின் உவகையுறுகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/99&oldid=1326252" இலிருந்து மீள்விக்கப்பட்டது