பக்கம்:தரும தீபிகை 5.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1639 கொள்ளுங்கள் என உலக மக்களுக்கு உறுதி நலனே இது உணர்த்தியுள்ளது. உண்மை நிலை ஒர்ந்து சிங்திக்கத் தக்கது. தீமை நஞ்சு என அஞ்சி ஒழிக. என்றது தன் உயிர்க்கு நேர்ந்துள்ள தீய அபாயத்தை நெஞ்சம் தெளிந்து மனிதன் விரைந்து விலக்க வேண்டும் என விளக்கி நின்றது. கொடிய துயரங்களே உளவாக்கி உயிர்களை நெடிது வருக்துகலால் தீமை நஞ்சினும் மிக அஞ்சத்தக்கதாம். 685. தொட்ட இடத்தில் தொடும்பொழுது மட்டும்தீ சுட்டுத் தகித்துக் துயருறுத்தும்-கெட்டவினே எவ்வழியும் நீங்காமல் இன்னுயிரைத் துன்புறுத்தி வெவ்வழலாய் கிற்கும் விரிந்து. (டு). இ-ள் தொட்ட பொழுது மட்டும் தொட்ட இடத்தில் தீ சுட்டு எரிக்கும்; தீவினை எ வ்வழியும் நீங்காமல் தொடர்ந்து படர்ந்து வெவ்வழலாய்க் ககித்து உயிரை என்றும் வருக்தி வரும் என்க. அல்லலை எல்லாரும் அஞ்சுகின்றனர். எவ்வகையிலும் யாதும் கனக்கு அது நேர லாகாகென்றே யாரும் கண்னும் கருத்துமாப் எண்ணி வருகின்றனர். அவ்வாறு எண்ணிவரினும் எல்லையில்லாத அல்லல்கள் எ வ்வழியும் தொடர்ந்து புகுந்து அடர்ந்து படர்ந்து அலைத்து வகைத்து வருகின்றன. இன்பங்களையே அனுபவிக்க வேண்டும் என்று பாண்டும் நீண்ட ஆவலோடு நிலவி வரும் மனிதர் துன்பங்களை அடைந்து துடித்து வருக்தி வருவது விசித்திரக் காட்சியாய் விரிந்து வருகி றது. வினேவிளைவு தெரியாமல் வெந்துயரமாய் விளிக் து வருகிரு.ர். துயரம் நேர்ந்தபோது மனிதன் தெய்வத்தை நோகின்ருன். աւոք தெய்வமே உனக்குக் கண் இல்லையா? எனக்கு இக்கத் துன்பத்தைக் கொடுத்து வருத்துகின்ருயே!” என்று துடித்து வைகின்ருன். தான் செய்த தீவினையின் விளைவு தன்னை வந்து வருத்துவதை உணராமையால் அவ்வாறு இன்னலுழந்து இழிந்து புலம்புகின்ருன். மனமுடைந்து மதிகெட்டு அப்படிப் புலம்புவ தை விட்டுத் தான் செய்த பிழையால் நேர்ந்த வெப்ய விதி என்று அவன் அதனை உணர்ந்து திருக்தி மேல் உய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/100&oldid=1326657" இலிருந்து மீள்விக்கப்பட்டது