பக்கம்:தரும தீபிகை 5.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1655 சிட்டர் ஆகியே அமர்தரும் இமையவர் சிறையை விட்டி டாதுநீ இருத்தியேல் மேவலர் புரங்கள் சுட்ட கண்ணுதல் குமரன் நம் குலமெலாம் தொலைய அட்டு கின்னேயும் முடித்திடும் சரதம்என்று அறைந்தான். (கந்தபுராணம்,சூரன் அமைச்சு 102.105) தம்பி கூறிய இந்த நீதிமொழிகளையும் கேளாமல் சூரபன் மன் தீமையிலேயே நிமிர்ந்து நின்ருன்; அதனல் அடியோடு அழிந்து ஒழித்தான். அழிவுகள் பாவத்தின் விளைவுகளாயுள்ளன. கல்வினையால் பல்வகை மேன்மைகளை அடைந்தான்; விேஜன யால் அல்லலுழந்து அழிந்தான் ஆசலால் தீமையின் விளைவாகிய அழிவுக்கு உலகம் கானும் சான்ருய் அவன் நிலவி கின்ருன். தீமையை நாவி என்று குறித்தது தன்னைக் கொண்டவரை அல்லலுறுத்தி அழித்து ஒழிக்கும் அதன் அவலநிலைதெரிய. தீமை யாண்டும் அல்லலாய் அழிவே கரும்: அதனை யாதும் தீண்டாகே எவ்வழியும் நன்மையையே காடி நலம்பல பெறுக. உள்ளம் தீமையா யுறினவன் உயர்வெலாம் இழந்து தள்ள ரும்பழி தாழ்வுகள் தமையடைக் கழிவான்; உள்ளம் நன்மையா யுறினவன் உயர் கதி எய்தி விள்ள ரும்புகழ் ஒளியுடன் மேவியின் புறுவான். இதனே உள்ளம் கொண்டு உப்தி யு.அறுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. தீமை மிகவும் தீயது. நஞ்சினும் கொடியது. அதனைத் கழுவினர் இழிவே அடைவர். பழிபடிந்து பாழ்படுவர். எவ்வழியும் இழிதுயருறுவர். புலையும் புன்மையும் நிலைபாயுழல்வர். எமதண்டனை எய்துவர். நஞ்சையுண்டவர் போல் நாசமே காண்பர். கல்வினை அமுதமாய் இன்பம் கரும். தீவினை விடமாய் அழிவே புரியும். சுகவது தீமை முற்றிற்று. -o-o-o-o:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/116&oldid=1326673" இலிருந்து மீள்விக்கப்பட்டது