பக்கம்:தரும தீபிகை 5.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1658 த ரும தீ பி. கை புலாலை உண்டு வருபவரும் அமாவாசை முதலிய விரத தினங் களில் அதனை உண்ணுமல் ஒதுக்கி விடுகின்றனர். ஆகவே ஊன் உணவு ஈனம் என அவரும் உணர்ந்துள்ளமை தெரிகின்றது. அவ்வாறு உணர்ந்தும் பழகிய சுவையில் பழுதா யிழிந்துள்ள னர். உள்ளே செல்லும் உணவின் பொல்லாமையைச் சிங்கனே செய்து நன்கு தெளியாமையால் உண்டு களிக்க நேர்ந்தனர். இழுகன்ன் வெண்கினத்த செந்தடிக்கே ஏட்டைப்பட்டு இரும்பில் போர்த்த பழுதெண்ணும் வன்மனத்தார் ஒட்டைமரச் செவியர் கேளார். பால்போன்று ஒழுகி அமுதுாறும் நல்லறத்தை ஒர்கிலர் ஊன்செய் கோட்டக்குக் கழுகுண்ண வள்ளுரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்ருர். - (சீவக சிந்தாமணி, 1552) தசையில் நசை கொண்டுள்ளவர் கல்லோர் கூறும் இனிய தரும நெறிகளைக் கேளார்; ஊனத் தின்று தம் உடம்பை வளர் த்துக் கழுகுகளுக்கு இரையாய் இழிந்து கழிந்து போவர்எனச் சீவக மன்னன் இவ்வாறு வருக்தி யிருக்கிருன். கடி=தசை. வள்ளுரம்=ஊன். ஈன ஊல்ை இழி துயர்களே ஏறுகின்றன. தின்று பழகிய பழக்கம் அதிலுள்ள கீமையைத் தெரிய ஒட்டாமல் மறைத்து வருகிறது. புலால் உண்பவர் இழிந்தவராக எண்ணப் படுகின்ருர். அதனை உண்ணுதவர் உயர்ந்தவராய் மதிப்படைந்துள்ளனர். உணவால் நேர்ந்தது.உறுதியாய் நின்றது. ஊன் உண்பவர் வீட்டில் மேலான சீலமுடையவர் உணவு கொள்ள மாட்டார். அதனை உண்ணுகவர்பால் யாவரும் கூசா மல் உணவருந்த நேர்கின்ருர். புலைப் புசிப்பால் இழிவும், அதன் ஒழிப்பால் உயர்வும் உளவாயிருத்தலே உலக அனுபவத்தில் கண்டு வருகிருேம். உணவு வகையால் உயர்வு தாழ்வுகள் அணவி யிருப்பது நுணுகி உணர வுரியது. கண் கூடான இந்த அனுபவங்களைக் கண்டும் புலாலை விடாமல் புசித்து வருவது புலையான பழக்கத்தால் புகுந்த பொல்லாத நிலையாயுள்ளது. ஊன் உண்டல் நீதியோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/119&oldid=1326676" இலிருந்து மீள்விக்கப்பட்டது