பக்கம்:தரும தீபிகை 5.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ւ % 1663 ஒருவன் ஊன்தின்னமல் உயிர்களை ஒம்பிவரின் அவனை வானும் வையமும் வணங்கிவரும் என இது உணர்த்தியுள்ளது. உயிர்கள் ஒம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின் செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்து ஒரீஇக் கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழும் மதிகள் போல மறுவிலிர் தோன்றுவிர். (வளேயாபதி) i. ஊன் உண்ணுமல் உயிர் ஒம்பி வருபவர் மறுமையில் தேவ ராப் உயர்ந்த கதிகளை அடைந்து கொள்ளுவர் என இது குறிக் துள்ளது. புனிதமான புண்ணிய வாழ்வு எண்ணி யுணர வந்தது. சீவக மன்னன் ஒருநாள் ஒரு காட்டு வழியே சென்ருன்; அங்கே ஒரு வேடனேக் கண்டான். அவன் பிராணிகளை வேட் டையாடி உண்னும் இயல்பினயிைனும் சிறிது அறிவு நலம் அவனிடம் மருவியிருந்தது. அரசனைக் கண்டதம் மரியாதை யோடு வணங்கி நின்ருன். அவனது நிலைமையை நோக்கி மன் னன் இரங்கினன். புலாலை உண்ணுகே, அகளுல் உயிர்க் கொலை நேர்கிறது; பழிபாவங்கள் விளைதலால் அது உன் உயிர்க்குக்கேடாம் என்று கூறினன். ஊன் தின் மைல் நான் எப்படி உயிர் வாழ் வது? என்று அவன் மாறிக் கேட்டான். காட்டில் தானியங்கள் உள; அவற்றை உண்டு வாழலாம்; ஊனே உண்டால் சரகத்துக் குப் போவாய், அகனே விட்டால் சுவர்க்கக்கை அடைவாய், எது உனக்கு இதமோ? அதைச் செய்து கொள் என்று வேக் தன் கூறவே வேடன் உணர்ந்தான்; புலால் அருந்தலை ஒழித்துப் புனிதன் ஆயினன். -- 'ஊன்சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் கன்ருே? ஊன்தினது உடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்ருே? ஊன்றி இவ் விரண்டி அனுள்ளும் உறுதிநீ உரைத்திடு என்ன ஊன்தினது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்ருன்." (சீவக சிந்தாமணி 1235) சீவகனது உணர்வுரையைக் கேட்டு வேடன் உய்திபெற்ற நிலையை இது உணர்த்தியுளது. உறுதி ஒர்ந்து உயர்வு கானுக, புலேயுணவு நீங்கின் புனிதனய் ஒங்கி நிலையுயர்ந்து கிற்கும் கெடிது, گاتات=============

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/124&oldid=1326681" இலிருந்து மீள்விக்கப்பட்டது