பக்கம்:தரும தீபிகை 5.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு லை Ltjö5 பமே புண்ணிய உணர்ச்சி' என்னும் இது ஈண்டு எண்ணி உணரத்தக்கது. தருமவுணர்வு இருமையும் இன்பம் கருகிறது. இத்தகைய உத்தம நிலையில் உணர்வு ஒளிபெற்று வர வேண்டுமாயின் அவன் உண்ணும் உணவு சுத்தமாயிருக்க வேண்டும். சிக்கசுத்திக்கு மூலகாரணம் சிந்திக்கத்தக்கது. உணவு தாயகேல் உணர்வும் தாயதாம். ஊன் உணவு ஈனம்மிகவுடையது. அதனை உண்பவர் மனம் மலினமாய்த் தீய வழிகளிலேயே உழன்று வரும். தீனியின்படி சிந்தனை திரிந்து வருதலால் ஊன் உண்டல் கிந்தனையாய் நேர்ந்தது. 'படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுக்காது ஒன்றன் உடல்சுவை யுண்டார் மனம்.' (குறள், 253) வில் வேல் வாள் முதலிய கொலைக் கருவிகளைக் கையில் வைத்திருப்பவர் விலங்கு பறவை முதலிய பிறவுயிர்களைக் கொல்ல எண்ணுவது போல் ஊன் உண்டவர் மனம் பொல்லாத வழிகளிலேயே புலையாடித்திரியும்' எனத் தேவர் இவ்வாறு கூறி யுள்ளார். செக்க பிணங்களைச் சுவை செய்து உண்பவர் என அவரது உணவின் புலையை உணர்த்தியுள்ளது உய்த்துணரத் தக்கது. ஊன் உணவு ஈன நினைவுகளை விளைத்து விடுகின்றது. ஈனமலம் தின்னும் இழி கோழி பன்றி என்றது ஊன் அருந்துவோர் உவந்து தின் அறுவரும் இழிவுகளை ஒர்ந்துணர வந்தது. கழிமுடையை உண்ணுவது பழிமூடையாயது. - பழகி வந்த பழக்கவாசனையால் பழி இழிவுகளை உணராமல் புலாலை உண்டு வருகின்ருர். அடுத்த விட்டில் யாராவது இறந்து போனல் அந்தப் பிணத்தை எடுத்துச் சுடுகாட்டுக்குக் கொண்டு. போகும் வரையும் உணவு கொள்ளாமல் இருப்பது இந்த நாட்டு மக்களின் வழக்கமாயுள்ளது. இப்படி ஆசாரமா யிருப்பவர் புலாலை அனாசாரமாய்ப் புசித்து வருவது விசித்திர வினோதமாயிருக்கிறது. உள்ளே சீலம் கொள்ளாமல் வெளியே கோலம் கொண்டு வருவதை ஞாலம் கண்டு நகைத்து வருகிறது. "பிணம் கிடக்க நான்துகரேன் என்று பேசும் , குணம்கிடக்க வேண்டியதென் கூருய்-பிணத்தைக் 09

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/126&oldid=1326683" இலிருந்து மீள்விக்கப்பட்டது