பக்கம்:தரும தீபிகை 5.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பு லை 1675

உண்ண ஊனே விரும்பி உயிர்க்கொலை எண்ணுவான்; கொலைகண்டிரங்கான்; கொலை பண்ணுவாரைத் தடுத்துப் பகர்கிலான்; கண்ணுவான் இவரோடெனும் கால்வரும்.'

(சிவதருமோத்தரம்) ஊனுணவில் கொலை விளைந்துள்ள நிலைகளை இது குறித்துள்ளது. கொலை விளைவால் வருதலால் புலாலை அருளுடைய மேலோர் யாண்டும் வெறுத்து விலகி யுள்ளனர். கண்ணளி சுரந்துவரும் அளவே மனிதன் புண்ணியவானப் உயர்ந்து விளங்குகிருன். உள்ளம் உருகி வர உயர்கதி அருகே மருவி வருகிறது. மனமிக உருகுகின்ற மாண்பினன் எவனே அன்னேற்கு உனலரு முத்தி கையின் உளதுஎன்ப; காமலோபம் கினேவறும் குரோதம் இன்னநீத்துகல் ஒழுக்கின்கிற்கும் வினேயினர் சரதத் தன்ருே மேதினி கிலேபெற்றுஒங்கும். (1) ஆனதால் பிறருக்கு ஆர்வம் அளிக்கும் சத்தியமேகூறல் மேனலமாகும் மெய்ம்மை விளம்பலின் தீங்குண்டாமேல் மோனமாயிருத்தல் வேண்டும்.மொழி.மகிழ்வு இல்லதேனும் தானலம் பிறர்க்கு நல்கின் சாற்றுதல் கடமை ஆமால் (2) (விண்டுபுராணம்) உள்ளம் இரங்கி எவ்வழியும் பிறவுயிர்கட்கு இதமே கருதி இனிது ஒழுகி வருபவரே புனிதமான உயர்கதியை அடைவர் என இது உணர்த்தியுள்ளது. உண்மையை ஊன்றி உணர்ந்து கொள்ளவேண்டும். சீவ இதம் தேவ கதியாய் வருகிறது. இன்னவாருன நன்மைகளையெல்லாம் புன்மையான புலை யுணவு கெடுத்துவிடுகிறது. அந்தக் கெடுநிலையை உணர்ந்து படுபழிநீங்கி வடு ஒழிந்து வாழ்ந்துவரின், அவ்வாழ்வு வையத்தி லேயே தெய்வத் திருவருளை நேரே அடைந்து கொள்ளுகிறது. தான் சுகமாய் வாழவிரும்பி உண்டுவரும் உணவில் பிற உயிர்கள் துன்பாயழிவுறும்படி அமைவது பழிகொடுக் கீமை பாம்; அதனை ஒழியவிடின் உயர்மேன்மைகள் பல உளவாம். "வாயில் சுவைவெஃகி மான்கொன்று மீன்கொன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/136&oldid=1326693" இலிருந்து மீள்விக்கப்பட்டது