பக்கம்:தரும தீபிகை 5.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. புல 1681 'விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்கண் கின்ருர்-இடருடைத்தாப் பெற்ற விடக்கு நுகர்தல் கடல்ந்ேதிக் s ". கற்றடியுள் ஆழ்ந்து விடல்.” (பழமொழி, 36) ஒருவர் ஐம்புல ஆசைகளையும் வென்று அரிய தவநிலையில் இருந்தார்; இடையே உடலில் சிறிது நோய் தோன்றியது; அந்தப் பிணியை நீக்குவதற்குக் கோழி ரசம் பருகவேண்டும் என்று மருத்துவர் குறித்தார்; அவரது உரையை மறுத்து விரத நிலையிலேயே அவர் விறுற்று கின்ருர். அங்கிலையைக் குறித்து வந்த பாட்ல் இது. கடலே நீந்திக் கரை ஏற நேர்ந்தவர் ஒரு பசு வின் கன்றின் கால்டியில் தங்கிய நீரைத்தாண்டாமல் ஆழ்க்கது போல் உடல் நோய்க்கு விடக்கு உண்டு உயிரைப் பாழாக்க லாகாது என்பது இதன் குறிப்பாம். பிணிக்கு மருந்து என்ற நிலை யிலும் கூட விடக்கைத் தீண்டலாகாது; புனித உணவையே மனிதன் உண்டு வர வேண்டும். உண்மையைக் கண்டு தெளிக.

=

698 இனிய கனிகாய்கள் எண்ணரிய கூழ்கள் புனித நிலையில் பொலிந்தும்-மனிதரதை உண்டு மகிழாமல் ஊனமுற ஊனருந்தல் பண்டு புரிந்த பழி. (அ) இ-ள் இனிமையான கனி காய்கள் நெல் புல் முதலிய நல்ல தானிய வகைகள் காட்டில் நிறைந்துள்ளன; இருந்தும் மனிதர் ஈனமாய் ஊன அருந்துவது பழவினையான பழியேயாம் என்க. உண்ண உரியன இதில் எண்ண வந்தன. உயிர் வாழ்க்கைக்கு உணவு அவசியம் தேவையாயிருத்த லால் மனிதன் முடிவில் பயிர்களை உளவாக்க நேர்ந்தான். அவை களிலிருந்து வரும் விளைவுகள் இனிய உணவுகளாயின. நெல்லு, புல்லு, வரகு, சாமை, சோளம், இராகி, தினை, உழுந்து, கடலை, அவரை, துவரை, பயறு, காணம், மொச்சை, முதலாகப் பலவகைக் கானியங்கள் உள்ளன. இவை யாவும் மனிதன் உண்ண உரியன ஆகலால் பண்டம் என வந்தன. பண்டி = வயிறு. அதில் இடுவது பண்டம் என் க. 211

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/142&oldid=1326699" இலிருந்து மீள்விக்கப்பட்டது