பக்கம்:தரும தீபிகை 5.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1688 த ரும தீ பி. கை புலால் உயிர்க்கொலையால் வருவது ஆகலால் அதனை உண்பது பாவம் என யுத்தி உணர்த்துகின்றது; அங்கப்புத்தி போனையால் ஊன்தின்றலை ஒழித்து உயர்ந்து ஒழுகுகிருன். கான் உண்ணும் உணவால் பிற உயிர்கள் சாகும்படி நேர்கின்றனவே! எனக் தண்ணளியோடு எண்ணியுணர்ந்தால் ஊன் உண்பவர் எவரா யினும் அதனை அவர் உடனே ஒழித்துவிட நேர்வர். நல்ல அன்னங்களை ஆராய்ந்து உண்ண உரிய மனிதன் பொல்லாத புலாலைத் தின்ன விழைவது புலைப்பழியாய் கின்றது. தின்று பழகிய பழக்கம் கொன்றுபடும் கொலைகளை ஒன்றும் உணராதபடி அ வ ை ஊனப்படுத்தி ஈனமாக்கி யுள்ளது. மனிதன் புலால் தின்ன நேர்ந்ததால் ஆடுகளும் கோழிகளும் பன்றிகளும் மாடுகளும் நாளும் நாளும் ஆயிரக்கணக்காகச் செத்து வருகின்றன. கொலையாளிகள் அவற்றை இவ்வாறு கொல்லுவது புலால் உ ண் ப வர் பொருட்டேயாம். புலாலை இவர் உண்ணுது ஒழியின் அக்கொலைகளை அவர் பண்துை ஒழி வர். புலே நுகர்வால் கொலை விளைவுகள் எங்கும் பொங்கியுள்ளன. தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊ ன் கருவார் இல். (குறள், 256) ஊன் தின்பவராலேயே உயிர்க்கொலைகள் நிகழுகின்றன. அவர் தின்னுராயின் அவை நிகழா; புலால் புசிப்பவர்கள்ாலே யே கொலைப் பாவங்கள் உலகில் நிறைந்து வருகின்றன எனக் தேவர் இங்கனம் இர ங்கியிருக்கிரு.ர். புலாலைத் தின்ற பாவமும், அப்புலாலுக்காக உயிர்களைக் கொன்ற பாவமும் மனித சமுதாயத்தை மாறி மாறி வ்கைத்து வருகின்றன. கொலையும் புலையும் கொடிய தீவினைகளாய்கின்றன. "கொன்ருன்; கொலச்சொனன்; கூசஅறுத்தான்; அட்டான்; தின் முன்; விலக்கிடான் தின்னென்று-கின்றவனவி வெட்டழல்க ளிட்டெரிக்க வெந்துகொடு வெந்நரகில் பட்டழன்று வீழ்வார் பதைத்து' (இதிகாசம்) ஊன் தின்பதால் விளையும் நரகதுயரங்களை இது உணர்த்தியுளது. இவ்வாறு எவ்வழியும் வெவ்விய துன்பங்களை விளைக்கும் புலாலை மனிதன் உவந்து உண்பது ஊனப்பழியாயுளது. இயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/149&oldid=1326706" இலிருந்து மீள்விக்கப்பட்டது