பக்கம்:தரும தீபிகை 5.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்தோராவது அதிகாரம். கொலை. அஃதாவது பிற பிராணிகளைக் கொல்லுகிற பொல்லாத தீமை. கொலே கொடிய பழி; நெடிய பாவம், அதனை எவ்வழி யும் ஒழித்து ஒழுக வேண்டும் என எதுக்களைத் தெளித்து உணர்த்துகின்றமையால்; புலேயின்பின் இது வைக்கப்பட்டது. 701 கொலேஎன்னும் சொல்லே குலேதுடிக்கச் செய்யும் . கிலேயைச் சிறிது கினேயின்-கொலையின் பழிதீமை எல்லாம் படுகோர மாகி விழிகேர் விளங்கும் விரிந்து. (க) இ-ள். கொலே என்னும் சொல்லைக் கேட்டபோதே உள்ளம் கலங் கித்துடிக்கிறது; அந்த நிலைமையைச் சிறிது கினைந்து நோக்கின் அதன் பழியும் தீமையும் எளிதே விளங்கித் கோன்றும் என்க. கொலையின் நிலைமையை இது உணர்த்துகின்றது. தீமைகளுள் கொலே மிகவும் கொடியது; யாரும் அஞ்சி வருந்துவது; என்றும் துயரங்களே விளேப்பது, அதனை நெஞ்சம் துணிந்து மனிதன் செய்வது நீசத்தனமாய் கின்றது. கள்ளன், பொய்யன், வஞ்சகன், தார்த்தன், குடியன், கோளன் என்னும் பழிமொழிகளினும் கொலைஞன் என்பது கொடுமையான பழியாம். கொலே கொடிய பாவம் ஆதலால் அதனைச் செய்தவன் கொலைபாதகன் என்று எள்ளி இகழப்படு கிருன். பிற உயிர்களைப் பதைக்க வகைத்தவன் தன் உயிர் என் அறும் பகைத்துத் துடிக்கப் படுதுயரங்களையே அடைந்து செத்து அடுநரகங்களில் விழ்கின்ருன். செய்துவரும் செயல்களின்படி யே யாவும் எ ப்க வருகின்றன. செயல் கொடுமையாகவே மனிதன் கொடியவன் ஆகின்ருன். - கொலைபுரிந்தவனக் கொன்று தொலைக்க வேண்டும் என் அனும் விதியால் அர சாங்கமும் அவனுக்கு மரணதண்டனையைக் கொடுத்துவருகிறது. இனிய மனிதத்தன்மையை அடியோடு இழந்து கொடிய நீசக்கொடுமையை மருவியபோது கான்கொலை நிலைக்கு ஒருவன் ஆளாகின்ருன்; ஆகவே அவன் பாழாகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/157&oldid=1326714" இலிருந்து மீள்விக்கப்பட்டது