பக்கம்:தரும தீபிகை 5.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க 2ல 1709 மது. அகல்ை உழைப்புகள் நேர்ந்தன. உழைப்பும் பிழைப்பும் காரண காரிய உரிமையில் தொடர்ந்திருக்கின்றன. துன்பச் சூழல்களைக் களைந்து நாளும் இன்பம் காண முயன்று வருவது வாழ்க்கைப் போராட்டமாய் வளர்ந்திருக்கிறது. உடலைப்பேன ஒடி உழைப்பதில் உயிருக்கு உரிய உறுதிகலங்களை மனிதன் மறந்துவிடுகிருன். குடும்ப இடும்பைகள் எவ்வழியும் நெடும்ப டர்களாய் விரிந்து யாண்டும் நெடிது நீண்டு நிற்கின்றன. பொருளுடையவன் மேலும் பொருளை நாடி உழல்கின்ருன். செல்வம் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லையே! என்று சிலர் உள் ளம் கவல்கின்ருர். அறியாமை மண்டிப் பொறிவெறி கொண்டு யாண்டும் சீவர்கள் வறியராயுழந்து சிறியரா யிழிந்து படுகின்ற னர். உடல் நோயும் பசிநோயும் காமநோயும் கடல் அலைகள் போல் ஓயாமல் அடல்புரிந்து அடர்ந்து வருகின்றன. 'அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால் சொன்ன விசாரம் தொலேயா விசாரம்; கல்தோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாாம்; இப்பாவி நெஞ்சுக்கு என்ன விசாரம் வைத்தாய் இறைவா! கச்சி ஏகம்பனே.” மனித வாழ்வின் கிலேமையைப் பட்டினத்தார் இப்படிப் * பரிந்து காட்டியிருக்கிருர். இன்னவாறு இன்னல் இடர்களோடு மன்னியுழல்கின்ற சீவர்களுக்கு இரங்கி இகம்புரிவதே யாவ ருக்கும் உரிய கடமையாம். பரிவு கோய்ந்துவரும் அளவே அறிவு தோய்ந்ததாம். பிறவுயிர்கட்கு இரங்குவது பேரறமாகிறது. இரக்கம் இகம் உதவி உபகாரம் என்னும் உரைகள் உயி ரினங்களின் நிலைமைகளை விளக்கி உயர்க்காருடைய தலைமை களைத் துலக்கியுள்ளன. பரிதாப நிலைகளில் பரிந்து வருந்தி இழிந்து திரிகின்ற பிராணிகள் பால் இரங்கியருளவே உயர்ந்த பிறப்பை மனிதன் அடைந்திருக்கிருன். உபகாரம் செய்து வரும் அளவு பயனுடைய பிறவியாப் அவன் உயர்நிலையை அடைகிருன். உயிர் ஊதியமான அங்க உதவி நலனை இழந்த போது பிறந்து வந்த பிறப்பு பிழையாய் இழிந்து போகின்றது. சீவர்களுக்கு நேர்ந்த இடர்களை நீக்கி இகம்புரிந்துவரும் இயல்பு எந்த மனிதனிடம் இனிது அமைந்திருக்கிறதோ அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/170&oldid=1326727" இலிருந்து மீள்விக்கப்பட்டது