பக்கம்:தரும தீபிகை 5.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1718 த ரும தீ பிகை அழியாதாயினும் உள்ளக்கை வகைத்து உயிரைத் துடிக்கச் செய்கிறது; அதனல் அது நெடிய அல்லலான பொல்லாத கொலையாம். யிேல்ை சுடுவதினும் வாயினுல் சுடுவது கொடிய துயரமாப்நெடிதுநீண்டுள்ளது. நிலைமையைகினைந்து சிந்திக்கவும். கொலை உடனே உயிரை நீக்கிவிடுகிறது; அத்தோடு துயர மும் தொலைந்தது. கொடுஞ்சொல் நெடுந்தியாய் நிலைத்து நின்று நெஞ்சை எரித்து என்றும் அழிதுயரே செய்யும் ஆதலால் அது பழியான அவலக் கொலையாய் வந்தது. வாளில்ை கொல்லும் கொலையினும் வாயினுல் சொல்லும் வசைமொழி நீள நின்று நெடுந்துயர் புரிகின்றது; சாகும் வரை யும் உள்ளத்தை வேகச்செய்து உயிரை வதைத்து வரும்ஆகலால் அது கொடிய சித்திரவதையினும் நெடிய கொலையாய் நேர்ந்தது. விதுரன் நல்ல நீதிமான், சிறந்த வில் வீரன். அந்த மதி மானேக் துரியோதனன் ஒருநாள் இகழ்ந்து பேசினன். பாண்ட வர்களுக்கு உதவியாகக் கன்பால் தாதுவந்த கண்ணனை உப சரித்து விருத்து புரிந்தான் என்ற கோபத்தால் அப்பெருந் தகையை அவன் பிழைபடப் பேசிய மொழிகள் கொடிய கொலையினும் துயரமாய் மூண்டு கெடிது துடிக்கச் செய்தன. முதல்விழைந்து ஒருவன் உடனியைந்த பொருள் பற்றி இன்புற முயங்கினும் அதிகமஎன்ற பொருள் ஒருவன் வேறுதரின் - அவனேயே ஒழிய அறிவரோ பொதுமடந்தையர் தமக்கு மண்ணில் இது புதுமை அல்ல அவர் புதல்வனும் விதுரன் இன்று அவனெடுறவு கொண்டது ஒர் வியப்பை என்சொலி. வெறுப்பதே! துரியோதனன் கூறிய வசைமொழிகளை இது வரைந்து காட்டியுள்ளது. பிறப்பை இளித்துப் பிழை தெளித்து நின்றது. விதுரன் திருகராட்டிரனுக்குக் கம்பி முறையினன். தந்தை ஒருவன், காய் மூவர். அம்பிகை, அம்பாலிகை என்னும் அரச குல மங்கையர் வயிற்றில் திருகராட்டிரனும், பாண்டுவும் முறையே பிறந்தனர். அனங்கனி என்னும் காசி வயிற்றில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/179&oldid=1326736" இலிருந்து மீள்விக்கப்பட்டது