பக்கம்:தரும தீபிகை 5.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1722 த ரும தீ பிகை எல்லா உயிரும் இறைவனுரு வாதலினல் பொல்லாக் கொலேங் புரியினே-வல்ல பரமனேயே கொன்ற படுபா தகனய் -- நரகம் புகுகின்ருய் நாடு. (சு) இ-ள். எல்லா உயிர்களும் இறைவனுடைய உருவங்கள் ஆதலால் பொல்லாதகொலைகளைச் செய்தால் பரமனையே கொன்றகொடிய கொலைபாதகய்ைப் பழி அடைந்து இழி நரகம் புகுவாய்; இந்த வுண்மையை உணர்ந்து நன்மையை நாடுக என்பதாம். உலகில் காணப்படுகிற பொருள்கள் உயிர் உள்ளன, உயிர் இல்லாதன என இருவகையுள் அடங்கியிருக்கின்றன. அளவிட லரிய நிலையில் யாண்டும் பெருகி யுள்ளன; அவை தோன்றி மறைந்து மீண்டும் மீண்டும் விளைந்து வருகின்றன. உயிர் உடை யது சரம், உயிர்இல்லாதது அசரம் என மருவியிருத்தலால் சராசரம் என யாவும் நிலவி நிற்கின்றன. பரந்த பொருள்களும் அவை நிறைந்துள்ள இடங்களும் அண்டசராசரங்கள் என அமைந்துள் ளன. இவ்வாறு இசைந்துள்ள எல்லாப் பொருள்கள் உள்ளும் எங்கும் தலைமையான ஒர் அதிசயப் பொருள் என்றும் கித்திய மாய் நிலைத்துள்ளது. அதனையே கடவுள் என்றும், பரம்பொருள் என்றும், இறைவன் என்றும் பல பெயர்களால் வழங்கி வரு கின்றனர். பரிபூரணன் என்னும் ஒரு பெயரால் அவன் எங்கும் நிறைந்து நிற்கும் நிலையை நன்கு உணர்ந்து கொள்கிருேம். எறும்புமுதல் யானை ஈருகவுள்ள சர வருக்கங்களையும், துரும்புமுதல் பெருங்கிரிவரையுள்ள அசர வருக்கங்களையும் காண நேருந்தோறும் ஆங்கு உயிர்க்கு உயிராப் உள் உறைக் துள்ள பரம்பொருளை ஊன்றி ஒர்ந்து கொ ள்ளவேண்டும். மெயப் யான இத்தகைய தெய்வக் காட்சியுடையவரே மேலான ஞானி கள் ஆகின்ருர். உண்மையை உணர்வதே உயரிய ஞானமாம். சீவர்களிடம் கருணை கூர்ந்து ஒருவன் ஒழுகிவரின் அவனி டம் தேவ ஒளி பெருகி வருகிறது. மன்னுயிர்களைப் பேணி வருப வன் தன்னை உண்மையாகப் போற்றி வருபவன் ஆதலால் அவன் பால் ஈசன் உவகை கூர்ந்து வாசம் புரிகின்றன். உயிர்களுக்கு ஊறு புரியாமல் ஓம்பி வருவது உயிர்க்கு உயிரான பரமனை உழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/183&oldid=1326740" இலிருந்து மீள்விக்கப்பட்டது