பக்கம்:தரும தீபிகை 5.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. ப N 1739 போகவே பின்பு மானமும் காணமும் இன்றி ஈனங்களில் அதுணிந்து புகுந்து மனிதன் மடிந்து போகின்ருன். பிறனுடைய மனே யாளை விழைக்கு புகுக் கால் அறம் அழி யும்; புகழ் ஒழியும்; கேண்மை கொலையுயும்; பெருமை பாழாம்; இன்ன வாருன இழவுகள் எ ப்துவதை அறிந்தும் யாதும் காணு மல் அயலாளைக் கழுவிக் களித்து அவலமாய் அழிந்து கழிகிருன். பகைபாவம் அச்சம் பழி.என நான்கும் இகவாவாம் இல் இறப்பான் கண். (குறள், 146) பிறன் இல்லாளிடம் செல்பவனுக்கு வரும் அல்லல்களைத் தேவர் இவ்வாறு எடுத்துக் காட்டி யிருக்கிரு.ர். பழி முதலிய இழி துயர்கள் அடைவதை அறியாமல் விழிகண் குருடனப் அழிவுறுகின்ருன். நிலைமையை கினையாமல் நீசம் அடைகின்ருன். தன் மனையாளைப் பிறன் கழுவக் கண்டால் உள்ளம் கொதித்து அவனே க் கொல்லப் பாப்கின்ருன்; அத்தகைய அனு பவமுடைய மனிதன் அணுவளவும் சிந்தியாமல் யாதும் கூசா மல் அயலான் இல்லை அணுகுவது எத்தகைய மடமை. எவ்வ ளவு கொடுமை! இகனை ஈண்டு உய்த்தன. வேண்டும். உடலின் சிறு தினவுக்காக உயிரைஅடர்காகில் தள்ளுகின்ருயே பேதையே! என்று ஒரு காமுகனே நோக்கி ஒர் மேதை இரங்கியிருக்கிரு.ர். இவ்வாருன பழிகளில் வீழ்பவன் பாழ் படுகின்ருன். பழிபடாமல் வாழ்கின்ற வாழ்வே வாழ்வாம். அவ்வாறு வாழ்பவரே விழுமிய மேலோராப் விளங்கி வருகின்ருர். பழி அஞ்சிப் பாத்துாண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். (குறள் 44) ஒரு மனிதனுடைய வாழ்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தேவர் இவ்வாறு உணர்த்தி யிருக்கிருர். பழி யாதும் இல்லாமல் நல்ல வழிகளில் பொருளை ஈட்ட வேண்டும்; அங்க னம் ஈட்டிய பொருளைப் பிறர்க்கும் வகையா ஊட்டி உதவித் தான் உண்டு உயிர் வாழ வேண்டும்; அத்தகைய வாழ்வு உத்த மமாப் ஒளி சிறந்து என்றும் நித்தியமாப்ப் பெருகி நிலைத்து வரும் என்ற தல்ை இதன் உயர்வை உணர்ந்து கொள்கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/200&oldid=1326758" இலிருந்து மீள்விக்கப்பட்டது