பக்கம்:தரும தீபிகை 5.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்து மூன்ருவது அதிகாரம். ப ா வ ம். அஃதாவது தீய வினைகளால் விளையும் திமை. உயிரைத் துய ரப்படுத்தி எவ்வழியும் அல்லல் அழிவுகளைத் தருகிற பொல்லாத பாவத்தை யாண்டும் யாதும் தீண்டலாகாது என இது உணர்த் துகின்றது. பழியோடு படிந்து வருவது ஆதலால் அதன்பின் இது வைக்கப்பட்டது. வைப்பு முறை உய்த்து உணரத்தக்கது. 721 இன்பம் கருதி இயலும் மனித இனம் துன்பம் மருவித் துடித்தல்தான்-என்பயனென்று எண்ணி ஒருவன் இடர்நீங்கி வாழுமேல் பண்ணுமோ பாவம் படிந்து. (க) இ-ள் எவ்வழியும் இன்ப சுகங்களையே நாடி மனிதக் கூட்டம் இயங்கி வருகிறது; வரினும் துன்பங்களை அடைந்து துடிக்கின் றன. அதற்குக் காரணம் என்ன? என்று ஒருவன் கருதி உணர் வான் ஆனல் பின்பு யாண்டும் அவன் இடர் செய்யான்; எவ் வழியும் இனியதே செய்து உயர்ந்து உய்வான் என்பதாம். உண்மை நிலைகளை ஊன்றி உணராமையினலேயே மனிதன் புன்மையடைந்து புலேயுறுகின்ருன். அறியாமை, மடமை, அஞ் ஞானம் என்னும் மொழிகள் மனிதன் மதிகேடனப் மறுகியுழ அம் இழி நிலைகளை வெளியே தெளிவாக விளக்கி நிற்கின்றன. கெட்ட நினைவுகளால் கேடுகள் விளைவதை உய்த்துணராமல் ஊனமா யுழல்வது யாண்டும் கொடிய ஈனமேயாம். ஏதேனும் துன்புற கேரின் எவனும் அஞ்சி அலமருகின் முன். இன்புறவரின் உள்ளம் உவந்து கொள்ளுகின்ருன். இந்த அனுபவ நிலைகள் மனித சமுதாயத்துள் யாண்டும் மருவியுள் ளன. இன்ப நலங்களையே என்றும் இயல்பாக அவாவியுள்ள மனிதன் அதற்குரிய மூலகாரணங்களை எவ்வழியும் மறவாமல் செவ்வையாய்ச் செய்து வரவேண்டும். o துன்பங்கள் யாவும் தீவினைகளிலிருந்து விளைந்து வருகின் றன. வித்தும் விளைவும் நன்கு உய்த்து உணர வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/217&oldid=1326775" இலிருந்து மீள்விக்கப்பட்டது