பக்கம்:தரும தீபிகை 5.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ꮾ2; தரும பிே கை சாக துயரங்களைத் தரும் ஆதலால் அதனை ஒருவி வாழ்வதே உயிர்க்கு உப்தி செய்வதாம். உறுதி ஒர்ந்து உயர்வு பெறுக. 733 தன்னுயிர்க்கு நன்மை தனேகாடி நின்றவன் மன்னுயிர்க்கோர் தீமை மறந்தேனும்-பின்னுயிர்த்துச் செய்யான் செயலெல்லாம் செய்யகலமாகி வையம் மகிழ வரும். (E) i. இ-ள் தன் உயிர்க்கு நன்மையை நாடுகின்றவன் பிற உயிர்கட்கு பாதும் தீமையைச் செய்யான்; எவ்வழியும் நன்மைகளையே நாடிச்செய்து உலகம் உவந்து மகிழ உயர்ந்து வருவான் என்க. அறிவு மனிதனுக்குத் தனி உரிமையாக இனிது அமைந்தி ருக்கிறது. நன்மை தீமைகளை காடி அறிந்து தன் வாழ்க்கையைச் செம்மை செய்துகொள்ள அது உதவிபுரிகிறது. தனது அனுப வங்களால் நிலைமைகளை துணுகி உணர்ந்து புனிதமான வழிக வில் ஒழுகி வருபவன் எவ்வழியும் இனியகுப் உயர்கின்ருன். நல்லது செய்வதால் இன்பமும் பெருமையும் வலிமையும் வருகின்றன. தீயது செய்வதால் துன்பமும் சிறுமையும் எளி மையும் விளைகின்றன. எளியனப் இழிந்துபோக எவனும் விரும் புவதில்லை; வலியகுயுயர்ந்துகொ ள்ளவே யாவரும் ஆவலோடு விழைந்துவருகின்றனர். தன்னுடைய இந்த இச்சைநிறைவேறிப் பலனுக்குவர வேண்டுமானல்அதற்குத்தகுதியானவினேகளே அவன் செய்து வரவேண்டும். வித்தியபடியே விளைவுகள் வருகின்றன. கெட்ட விதை கேடான பலன்களைத் தருகின்றது. கல்லவிதை நன்மையான விளைவுகளை அருளுகின்றது. தான் கேடுசெய்தால் தனக்கே கேடாய் அது ஓடிவருகி றது; சன்மை செய்தால் நல்லதாய் இன்பம் சுரந்து எவ்வழியும் இதம்புரிகிறது. செய்த வினைகளுக்கு நேரான பலன்களேயன்றி மாமுனவைகளை யாரும் யாண்டும் அனுபவிக்க முடியாது. = i ஆலமது நல்குமவர் ஆசமுதம் உண்ணும் பாலுடையர் ஆவதும் படிக்கண் உளதாமோ? சால மதுரக்கனிகள் தாம் நுகரு வாரோ ஞாலமிசை எட்டிமரம் கட்டவர்கள்தாமே? (சேதுபுராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/223&oldid=1326781" இலிருந்து மீள்விக்கப்பட்டது