பக்கம்:தரும தீபிகை 5.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1771 அகனல் அழிதுயரங்கள் பல அடைகின்ருன்; முடிவில் அடுநரகி அம் விழுந்து கொடிதாய் அழுது துடிக்கின்ருன் என்பதாம். தன்னை இழிவாக இகழ்ந்து சொல்லும் பழி மொழிகளை எந்த மனிதனும் விரும்பான். உயர்வாகப் புகழ்ந்து பேசவேண் டும் என்றே யாவரும் யாண்டும் அவாவி நிற்கின்றனர். இந்த நிலைமையைச் சிந்தனை செய்து பார்த்தால் மனித தத்துவம் ஒரளவு தெளிவாகத் தெரியலாகும். பிறவிகள்தோறும் பழகி வந்துள்ள பழக்க வாசனைகளால் மனித இனம் கட்டுப்பட்டு மறுகியுழல்கின்றது. வாசனை வசமாய் மனம் செல்லுதலால் நல்லது தீயதை காடி அறிய முடியாமல் அது ஒடுகின்றது. பொல்லாத வழிகளில் செல்லலாகாது என்று அறிவு தடுத்தா லும் அத்தடைகளை மீறி மனம் தாவிப்போகிறது. வாசனை வய மான மனதுக்கும், யோசனை மிகவுடைய அறிவுக்கும் ஓயாத போராட்டம் உள்ளே எப்பொழுதும் கடந்துகொண்டிருக்கிறது. அறிவு ஒளியுடையது; ஆன்ம விழியாயுள்ளது; மேன்மை யான நிலைகளை ஆயவல்லது; நல்ல வழிகளையே நாடிச் செல்வது. மனம் சலனம் உடையது; தெளிவில்லாதது; எ ைத யும் விரைந்து பற்றுவது; பொறியின் பங்களில் கெடிது பழகி வெறி கொண்டு திரிவது. இந்த மனக்கை அறிவால் அடக்கி எந்த மனி தன் நெறியே ஒழுகி வருகின்ருனே அந்த மனிதனே பெரிய மகானுப்ப் பேரின்ப நலங்களை நேரே அடைய நேர்கின்ருன். தன் நெஞ்சை நல்ல வழிகளில் ஒருவன் பழக்காது விடின் அது பொல்லாத புலைகளில் பொங்கிச் செல்லும், செல்லவே அல்லலும் பழிகளும் அடர்ந்துவரும். பழியான செயல்களில் கூகி ஒடுங்காமல் நீசமாய் மனம் நிமிர்ந்து சென்றபோதுதான் பாவங்கள் விளைந்து வருகின்றன. அவ்விளைவால் கொடிய துய ரங்கள் நெடிது வளர்ந்து எவ்வழியும் வெவ்விய அவலங்களே விரிகின்றன. செயல் பழியாயபோது துயர் ஒழியாது வருகிறது. தீமையான காரியங்களைச் செய்கின்றவன் பாவி ஆகின் முன். இந்தப் பெயர் சேமான நெடிய பழிகளை விளக்கியுள்ளது. பாவத்தைச் செய்கின்றவன் தன் உயிர்க்குக் கொடிய ஆபத்தைச் செய்தவனகின்றன். இம்மையில் வறுமை பிணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/232&oldid=1326790" இலிருந்து மீள்விக்கப்பட்டது