பக்கம்:தரும தீபிகை 5.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1789 உரையில் மருவியுள்ள பரிவும் வேகமும் ஊன்றி உணர வுரியன. மனிதன் புகழுடையவகை வேண்டும் என்னும் ஆவல் தேவர் உள்ளத்தில் ஊடுருவியுள்ளதை உரைகள் உணர்த்தி கிற்கின்றன. அருமையான சிறந்த மனிதப் பிறப்பில் பிறந்தும் அதற்கு உரிமையான புகழை அடைந்து கொள்ளாமல் வறிதே ஒருவன் கெடிது வளர்ந்திருப்பது பெரிய பழியாம்; பழியான அவன் மனித உருவில் மருவியிருப்பது அதற்கு ஒர் இழிவாம்; ஆகவே அவனது இருப்பு வெறுப்பாயது; உயிரின் பயன் இல்லாத அவன் இருப்பதினும் இல்லாமல் மறைந்து விரைந்து ஒழிந்து போவதே நல்லது என்பார் தோன்ருமை நன்று என்ருர். இழிந்த ஆடு மாடுகளாய்ப் பிறந்திருப்பின் அவை புகழ் அடைய வில்லை என்று யாரும் இகழ்ந்து சொல்லார்; உயர்க்க அறிவுடைய மனிகளுய்ப் பிறந்திருந்தும். அதற்குத் தகுங்க பயனே அடையானயின் அவன் வாழ்வு மிகவும் கடையாம் என்க. மனிதப் பிறப்புக்கும் புகழுக்கும் உள்ள உறவுரிமையை மேலே வந்துள்ள அருமைத் திருக்குறளால் நன்கு உணர்ந்து கொள்கிருேம். புகழை உரிமையாகப்பெறுவதே பிறவிப்பயனும். பிறந்த பிள்ளை சிறந்த குணமுடையதாயின் பெற்ருேர்க்கு மகிழ்ச்சி, அங்கக் குடிக்கும் பெருமையாம்; உலகில் தோன்றிய மனிதன் ஆன்ற புகழுடையனயின் மனித சமுதாயம் இனிது மகிழும்; அந்த நாட்டுக்கும் ஏற்றமான நன்மையாம். ஒருவனுடைய குணமும் ’செயலும் இனியனவாயின் பிறர்க்கு அவை மகிழ்ச்சியைக் கருகின்றன; தரவே உள்ளம் உவந்து அவர் அவனைப் புகழ்ந்து பேசுகின்ருர். அவ்வாறு புகழ் மொழிகளால் ஒளி பெற்று விளைந்து வந்தது எதுவோ அது புகழ் 3T ଈଘT வந்தது. No _ Gኒ) ጬ5 வழக்கு உயர்வாய் நிலவியது. புகழை எவரும் எளிதில் அடைய முடியாது; அரியன செய்பவரே அதனை அடைய நேர்கின்ருர். நல்ல பலனைப் பெற விரும்பினவர் அல்லலுக்கு அஞ்சாமல் ஆண்மையோடு முயன்ற போதுதான் யாண்டும் உயர்ந்த மேன்மை யுஆறுகின்ருர். “The heart that is soonest awake to the flowers Is always the first to be touch’d by the thorns” (Thomas Moore)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/250&oldid=1326808" இலிருந்து மீள்விக்கப்பட்டது