பக்கம்:தரும தீபிகை 5.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ச வு 1565 கன் கெஞ்சைப் பழுதுபடுத்திக் கன்னைப் பாழாக்கும் வஞ் சனேயை அறவே ஒழிக்க வேண்டும்; அவ்வாறு ஒழிப்பின் அந்த மனிதன் உயர்ந்த கதிகலங்களை அடைந்து கொள்ளுகிருன். வஞ்சமனத்து அஞ்சொடுக்கி வைகலும்ங்ற் பூசனேயால் நஞ்சமுது செய்தருளும் நம்பிஎனவே கினேயும் பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான் கொஞ்சுகிளி மஞ்சனவும் கோளிலிஎம் பெருமானே.” (தேவாரம்) கன்னே வஞ்சித்து வந்த மனக்கை அடக்கியதால் அருச்சு னனுக்கு ஈசன் அருள் கிடைக்கது என இப் பாசுரம் உணர்த்தி யுள்ளது. வஞ்சமின்றி வணங்குமின் வைகலும்; வெஞ்சொலின்றி விலகுமின் விடற; நைஞ்சு நைஞ்சுகின்று உள்குளிர் வார்க்கெலாம் அஞ்சல் என்றிடும் ஆனேக்கா வண்ணலே. (தேவாரம்) வஞ்சமில்லாதவர்க்கு ஆண்டவன் அருள் உண்டாம்; அவர் நீண்ட பேரின்ப நலன்களை எப்துவர் என இது குறித்துள்ளது. 'வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவிைேர்க்கு எளியர் போலும் குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினேக் குமைப்பர் போலும் விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்தெழுந்த நஞ்சணி மிடற்றர் போலும் நாக விச்சரவ ளுரே (தேவாரம்) ஈசன் வஞ்சகர்க்கு அரியன், மருவினர்க்கு எளியன் எனத் திருநாவுக் கரசர் இவ்வாறு அருளியுள்ளார். வஞ்சத்தீமை ஒழிந்து நெஞ்சம் தாய்மையடையின் தாய பரம்பொருளை நேரே அவன் அடைந்து கொள்ளுகிருன். - உள்ளத்தைப் புனிதம் ஆக்கி உயர்கதி யுறுக. இவ் அதிகாரத்தின் தொகைப் பொருள். நெஞ்சம் கரவுறின் வஞ்சன் என வகை வரும். நேர்மை சிதைந்து சீர்மை அழியும். உள்ளம் இழிந்து ஊனம் அடையும். கள்ளம் ஒழியின் உள்ளம் கெளியும். வஞ்சனேயாளர் நஞ்சென உரியவர். நம்பி நெருங்கின் நாசங்கள் விளையும். பாம்பினும் கொடிய ம்ேபுகள் புரிவர். உணராது அணுகின் உயிர்க்கேடு நேரும். அணுக்ாது அகலுதல் யாண்டும் நல்லது. கரவு நீங்கின் கதிநலம் ஒங்கும். சுகவது கரவு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/26&oldid=1326583" இலிருந்து மீள்விக்கப்பட்டது