பக்கம்:தரும தீபிகை 5.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1799 பாராட்டுகின்றனர். புகழ் இல்லையேல் மணம் இழந்த மலர் போல் அவன் மாண்பிழந்து படுகின்ருன். மணம் என்றது மனம் கவரும் குணம் கருதி வந்தது. புகழ் எவர்க்கும் உவகை தருகிறது. அதனை ஆவலோடு அவாவி உழல்வது சீவ சுபாவமாயுள்ளது. தன்னைக் குறித்துப் பொய்யாகப் புகழ்ந்து சொன்னலும் அந்தப் புகழ் மொழியைக் கேட்டு எவனும் மெய்யாக உள்ளம் உவந்து கொள்கிருன். பேடியைப் பார்த்து நீ நல்ல சுத்தவீரன்” என்ருல் அவன் உள்ளம் களித்துத் துள்ளுகிருன். கொடிய உலோபியை நோக் கிப் பெரிய வள்ளல் என்று சொன்னுல் அவனும் நெடிய உவகை கூர்கின்ருன். இழி பழியில் இழிந்திருப்பவரும் புகழை விழைந்து கொள்வதால் அதன் விழுமிய நிலையை உணர்ந்து கொள்கிருேம். அதிசய இனிய அமுதமாய் அது தனியேயுளது. புகழ்ந்து பேசினல் எவரும் வணங்கி வசமாய் வருகின்ற னர். தனியே இருக்கும்போது யாதும் கொடாக உலோபி காலு பேரிடையே செல்வப்பிரபு வள்ளல்!” என்று துதித்துச் சொன் ல்ை பொருளைக் கொடுக்க நேர்கின்ருன். வெளிப் பகட்டான போலிப் புகழுக்காகப் பெரும் பொருளை வாரி வீசுகின்றவரை பும் நேரே கண்டு வருகிருேம். புகழில் மனிதர் கொண்டுள்ள ஆவல் அதிசய மருமமாய்மருவி அதன் உயர்நிலையை விளக்கியது. புகழ்ச்சி விருப்பன் எனச் சிவபெருமானேச் சிவப்பிரகாச சுவாமிகள் அதி விசயமாக் துதித்திருக்கிரு.ர். துதிமொழி மதி சலங் கனிந்து பத்திச்சுவை சுரக்து வித்தகமாய் வெளிவந்துளது. 'நலமலி வாதவூர் நல்லிசைப் புலவ! மனம்கின்று உருக்கும் மதுர வாசக! கலங்குறு புலனெறி விலங்குறு விர! திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன் ஒருகல ஏனும் உணரான்; அஃதான்று கைகளோ முறிபடும் கைகள்; காணின் கண்களோ ஒன்று காலேயில் காணும் மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும் பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும் ஆயினும் தன்னே புேகழ்ந்து உரைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/260&oldid=1326818" இலிருந்து மீள்விக்கப்பட்டது