பக்கம்:தரும தீபிகை 5.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1802 த ரும தி பிகை புலவர் பெருமான் அரசர் பெருமானுக்கு இவ்வாறு அறிவுறுத் தியிருக்கிருர். உயிர் வாழ்வின் உயர்வுகள் இதில் உணர வந்தன. புகழை எளிதாக அடைதற்கு இனிய வழி ஈதலே என்பது இங்கே தெரிய வந்தது. வறுமையால் வாடி வந்தவரது பசித் துயரங்களை நீக்கி உயிர்களுக்கு ஈதல் இன்பம் புரிகிறது; புரிய வே அதனல் புகழ் விளைந்து வந்து அக்க உதவியாளனுக்கு உயர் பதம் அருளுகிறது. ஈக்கவன் மாந்தருள் மகிமை யுறுகின்ருன். 'ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே.” (மதுரைக்காஞ்சி, 205) மன்னன நோக்கி மாங்குடி மருகனர் இவ்வாறு به او resب பாடியிருக்கிருர். இசை விளைந்துவரும் இயல் தெரிய வந்தது. . ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ' ஊதியம் இல்லே உயிர்க்கு. (குறள், 231) உயிர்க்கு ஊதியம் புகழ்; அது ஈதலால் வருகிறது; அங்க ஈதலைச் செய்து இசைபெற்று வாழுக எனத் தேவர் இங்கனம் உணர்த்தியுள்ளார். மனிதன் புகழ் பெறவில்லையானல் உயிரின் பயனை இழந்தவனுகின்ருன்; ஆகவே அவன் இருப்பின் இழிவு தெரிய வந்தது. ஊதியம்=இலாபம், பயன். உயிர்க்கு ஊதியம் பெற்றவர் உயர்கதி பெறுகின்ருர்; அங்ங்னம் பெருகவர் இழி நிலையில் காழ்கின்ருர். புகழை ஈட்டிப் புனித நிலையை நாட்டுக 67T மனிதனுக்கு மதியூட்டி இது கதி காட்டியுள்ளது. ஈட்டு நன்புகழ்க்கு ஈட்டிய யாவையும் வேட்ட வேட்டவர் கொள்மின் விரைந்தெனக் கோட்டி மாக்களேக் கூவுவ போல்வன கேட்டிலன் முரசின் கிளர் ஒதையே. (இராமா, பள்ளி, 31) புகழை ஈட்டுகற்காக ஈட்டிய பொருள்கள் யாவையும் யாவர்க்கும் வாரிக் கொடுத்தார்; அந்த ஈதலை அறிவித்தற்காகக் கொடை முரசங்கள் அயோத்தியில் முழங்கி வந்தன என இது காட்டியுள்ளமையால் அங்கே புகழ் விளேக்துள்ளமை காண்க. ஈகைக்கும் புகழுக்கும் உள்ள தொடர்பை இகளுல் அறிக் துகொள்ளுகிருேம். அழியும் இயல்பினதான பொருளை வழங்கி அழியாத புகழை அடைந்துகொள்பவர் விழுமியோராய் விள்ங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/263&oldid=1326821" இலிருந்து மீள்விக்கப்பட்டது