பக்கம்:தரும தீபிகை 5.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. பு க ழ் 1825 ஒரி இவன் சீரிய பண்புகள் அமைந்த விரியன். கொல்லி மலைக்குத் தலைவன். எதையும் குறி கப்பாமல் வில் எய்வதில் வல்லவன். அகனல் வல்வில் ஒரி எனப் பல்லோரும் புகழ்ந்து சொல்ல நல்ல விருதுப் பேரோடு விளங்கி நின்ருன். கொல்லி ஆண்ட வல்வில் ஓரி' எனப் பெருஞ் சித்திரனர் இவனே இங்கனம் குறித் திருக்கிருர். யாவர் வரினும் யாதும் மருமல் உவந்து கொடுத்து வந்தான் ஆதலால் இவன் புகழ் நாடெங்கும் பரந்து நின்றது. "ஓங்கிருங் கொல்லிப் பொருகன் ஒம்பா ஈகை விறல்வெய் யோனே.” (புறம், 152) என உலகம் உவந்து புகழ இவன் உயர்ந்து விளங்கினன். எழினி. இவன் விழுமிய நீர்மையன். குதிரை மலேயும் அதனை அடுத் திருந்த நாடும் இவனுக்கு உரிமையாயிருந்தன. தன்பால் வந்த வர்க்கு எதையும் அன்போடு உதவி வந்தான். கடையில்லாத கொடையாளி என்று நாடு புகழ இவன் பீடு பெற்று கின்ருன். போரினும் வல்லவன் ஆதலால் பேரரசரும் இவனுடைய உத வியை நாடி உறவு கொண்டு உரிமை பூண்டு வந்தனர். “ஊராது ஏங்திய குதிரைக் கூர்வேல் கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினி.' (புறம், 158) இவனுடைய வேல் மாலை அணி முதலியவற்றைக் குறித்து இன்னவாறு புலவர் பலரும் புகழ்ந்து கூறியுள்ளனர். கொடை வீரமும் படை வீரமும் இவனிடம் நன்கு குடிகொண்டிருந்தன. "வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி.' o (குறுந்தொகை 80) போர் முனையில் எழினி புரிந்துள்ள விர நிலையை இது விளக் கியுள்ளது. ஈகையிலும் வாகைபெற் றிருந்தமையால் விரவள்ளல் от ќтЕГ யாரும் உவந்து புகழ்ந்து வர இவன் விளங்கி கின்ருன். பேகன். --- இவன் மலை நாட்டு மன்னன்; நிலைநாட்டிய புகழை யுடை பவன். நல்ல அறங்கள் பல செய்து வந்தமையால் இவன் 229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/286&oldid=1326846" இலிருந்து மீள்விக்கப்பட்டது