பக்கம்:தரும தீபிகை 5.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1838 த ரு ம தீ பி ைக அறம் இன்னது என்பதைத் தேவர் இவ்வாறு செவ்வையாக விளக்கியிருக்கிருர். மனம் மாசு நீங்கிய போது கேசு பெறு கிறது. தாய உள்ளம் உடைய அவனது சொல் செயல் எல்லாம் கல்லனவாய் வருகின்றன. வரவே புண்ணியம் விளைந்து மிளிர் கிறது. அதனல் இன்ப நலன்கள் யாவும் எளிதே வருகின்றன. 'புண்ணியம் பயக்கின்று.ழி அரியது எப்பொருளே?’’ (இராமா, கவங்க, 41) இந்த அருமை வாசகம் அரிய பலமருமங்களைத் துவக்கியுள்ளது. அறிவின் சுவையைக் கருதி நுகர வேண்டும். புண்ணியம் பலன் கொடுக்க நேர்ந்தால் எண்ணரிய அதிசய இன்பங்கள் எதிரே பெருகி வரும் என்பது இகளுல் நன்கு தெரிய வந்தது. இருதயம் பரிசுத்தம் ஆய போது மனிதன் தெய்வக் கன் бтро I Г) баг (L/ அடைகிருன்; அடையவே அரிய சுவர்க்க போகங்கள் அவனுக்குத் தனி உரிமைகளாய் இனிது அமைகின்றன. “When we shall reverence heart, not brain, Then Eden will be man’s domain.” (New Eden) 'நாம் இதயத்தைப் புனிதமாக்கி விழுமிய நிலையில் ஒழுகி வரின் இன்ப வுலகமாகிய சுவர்க்கம் மனிதனுடைய கனி இராச்சிய மாயிருக்கும்’ என்னும் இது இங்கே இனிது அறிய வுரியது. புண்ணியமே கண்ணியமான கதி என்றது உயர்கதி எய்தி உய்ய வுரிய மனிதன் விரைந்து உணர்ந்து கொள்ள வேண்டிய உறுதிகலனை உணர்த்திகின்றது. உணர்வுதெளிந்து உயர்வுபெறுக. 742 தண்ணளியோ டெவ்வுயிர்க்கும் கான்செய்த கல்வினையே புண்ணியமாம் பேரோடு போங்துங்ன்று-எண்ணியன எல்லாம் எளிதா இனிதருளி எஞ்ஞான்றும் நல்லான் எனச்செய்யும் நன்கு. (e-) இ-ள். எவ்வுயிர்க்கும் இரங்கி அருள்புரிந்து ஒழுகும் இனிய நீர் மையே புண்ணியம் எனப் பொலிங்து நின்று எண்ணிய இன்ப கலங்களை எல்லாம் இனிது அருளி அரிய மேன்மைகளை உரிமை யோடு புரியும்; அதனை மருவி மகிழுக என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/299&oldid=1326860" இலிருந்து மீள்விக்கப்பட்டது