பக்கம்:தரும தீபிகை 5.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75. புண் ணியம் 1847 செல்வம் சிறப்பு இன்பம் முதலிய யாவும் புண்ணிய விளை வாய் வருகின்றன; அதன் அளவுக்குத் தக்கபடி அமைந்து நின்று பின்பு எல்லாம் கரைந்து மறைந்து போகின்றன. புண்ணியம் உலர்ந்தபின் பொருள் இலார்களேக் கண்ணிலர் துறந்திடும் கணிகை மார்கள்போல் எண்ணிலள் இகங்திடும் யாவர் தம்மையும் நண்ணிய நண்பிலள் கங்கை வண்ணமே. (சூளாமணி) பொருள் இருக்கும் வரையும் வேசையர் விழைந்து தழுவுவர்; அது இல்லையானல் எவரையும் இகழ்ந்து விடுவர்; அதுபோல் புண்ணியம் இருக்கும் வரையும் செல்வ போகங்கள் சேர்ந்திருக் கும்; அது தீர்ந்ததானுல் அவை யாவும் உடனே விலகி விடும் என இது விளக்கியுள்ளது. இன்ப நிலை இனிது தெரிய வந்தது. எந்தக் காரணத்தால் எது வங்கதோ அது முடிக்கதும் அங் தக் காரிய வரவும் ஒழிந்து போகிறது. செப்த கல்வினையால் செல்வச் சிறப்புகள் சேருகின்றன; சேரவே மனிதன் சிங்கை திரிகின்ருன்; செருக்கு மிகுகின்ருன்; பொறி வெறிகளில் இழி கின்ருன்; பிறரை இகழ்வா எண்ண நேர்கின்ருன்; பாவத் தொடர்புகள் பற்றி ஏறுகின்றன: ஏறவே பெற்ற நலன்களை யெல்லாம் இழந்து பேதையாயிழிந்து அழிந்து போகின்ருன். புண்ணியத்தால் வந்த பொருளும் புகழுமது நண்ணி யுளஅளவே கண்ணுமால்--கண்மறையின் யாவும் அவமே அழியும் அரும்பொருளின் ஆவி அறமே அறி. செல்வத்தின் உயிர் புண்ணியமே, அதனைப் போற்றி ஒழு கும்வரையும் எல்லா ஏற்றங்களும் உளவாம். போற்ருது விடின் யாவும் பொன்றி ஒழியும் என இது போதித்துள்ளது. தன்னை உரிமையோடு பேணி வருபவரைத் தருமம் எவ்வழி 'யும் பெருமைகள் பெருகிவரச் செவ்வையா 2്Lങ്ങ வருகிறது. அதனை மறந்து பிரிந்தவர் காமாகவே இழிந்து அழிந்து ஒழி கின்ருர். கருமத்தை மறந்தவன் இருந்தும் இறந்தவன் ஆகின் முன்; பழி துயரங்களையும் அழிகேடுகளையும் அடைய சேர்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/308&oldid=1326871" இலிருந்து மீள்விக்கப்பட்டது