பக்கம்:தரும தீபிகை 5.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1866 த ரும தீ பி. கை பிற உயிர்களுக்கு இரங்கி யருளுகிற உபகாரி நிலத்தில் பயிர் எவ்வழியும் செழித்து விளையும் என்பதை இது விளக்கியுளது. வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்துஒம்பி மிச்சில் மிசைவான் புலம். (குறள், 85) விருந்தினரை முன்பு ஊட்டிப் பின்பு உண்னும் உபகாரி கிலத் தில் வித்தும் விதைக்கவா வேண்டும்? என்று கேவர் இப்படி வினவி யிருக்கிரு.ர். எரு இட வேண்டுமா? நீர் டாய்ச்ச வேண் டுமா? என்று கேட்கவில்லை. விளைவுக்கு வித்த எவற்றினும் கலை மையானது. அதுகூட வேண்டியதில்லை; புண்ணியம் ஒன்றிருக் தால் போதும்; அக்கப் புண்ணியவான் எ ண்ணியபடியெல்லாம் நிலம் நன்கு விளையும் என இது இங்கு விளக்கியுள்ளது. நங்களுர் யாதும் விதையாமலே கட்டு முக்கலங்கள் கான கதிர் படி நெல்லு காண மட்டில்லா விளைவு கண்டான் மாதவன் என்றது எதனுல்? இகனைக் கருதிக் கான வேண்டும். வித்தும் இடவேண்டும் கொல்லோ விடையடர்த்த பத்தி யுழவன் பழம்புனத்து-மொய்த்தெழுந்த கார்மேகம் அன்ன கருமால் திருமேனி ர்ேவானம் காட்டும் கிகழ்ந்து. (இயற்பா) திருமழிசையாழ்வார் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். வள்ளுவர் வாப் மொழியை இது வரைந்து வந்துள்ளது. இந்த ஒப்புமை கிலே ஒர்ந்து ஆராய்ந்து காலமுறை கேர்த்து கொள வுரியது. உ ருகிய அன்பன் கிலத்தில் திருமாலே கருமேகமாய்க் தோன்றிப் பெரும் போகங்களைத் விளைத்தருளுவார் என இது உணர்த்தியுள்ளது. மனிதன் எண்ணியபடி யாதும் சடவாது; அவன் பண்ணிய புண்ணியம் இருக்கால் அது எண்ணரிய மேன்மைகளை இனிது விளைத்து இன்பங்களை அருளும் என்பது எளிது தெளிய வக்கது. எண்ணி ஒருகருமம் யார்க்கும்ெ சய் யொண்ணுது புண்ணியம் வந்தெய்து போதல்லால்- கண்ணில் லான் மாங்காய் விழஎறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு. (நல்வழி 4) ஒரு குருடன் கையில் கோல் இருக்கது; வழியைத் கடவி கடத் தற்கு அத அவனுக்கு உதவியாப் நின்றது. ஒரு சோலைவழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/327&oldid=1326892" இலிருந்து மீள்விக்கப்பட்டது