பக்கம்:தரும தீபிகை 5.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1878 - த ரு ம. தீ பி ைக் "நீயே அலங்குளேப் பரீஇ யிவுளிப் பொலந்தேர் மிசைப் பொலிவு தோன்றி மாக்கடல் கிவந்து எழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினே' (புறம், 4) சூரியன்போலக் கேரில் எழில் மிகுந்து விளங்கும் தேசாதி பதியே! என்று சோழ மன்னனே நோக்கிப் பானர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். கதிரின் உவமை காட்சிகள் பல காண வந்தது. விரியிருட் பகையை ஒட்டித் திசைகளே வென்று மேல் கின்று ஒரு தனித் திகிரி யுக்தி உயர் புகழ் கிறுவி நாளும் இருகிலத்து எவர்க்கும் உள்ளத் திருந்தருள் புரிந்து வீய்ந்த செருவலி விரன் என்னச் செங்கதிர்ச் செல்வன் சென்ருன். (இராமா, கங்கை 49) பகை இருளை ஒட்டித் திசைகள் தோறும் கனது ஆணையைச் செலுத்திப் புகழ் ஒளி பரப்பி உலக உயிர்கள் உவந்து வாழ எவ் வழியும் அருள் புரிந்து ஆகரித்து வந்த தசரத மன்னன் போல் சூரியன் அன்று மறைந்தான் என வரைந்து கூறியிருக்கும் இந்த அருமைப் பாசுரம் இங்கே உரிமையோடு உணர்ந்து கொள்ளவுரியது. உலக ஒளியாப் அரசு நிலவியுள்ளது. - சீர்மை நீர்மைகளில் சிறந்து மன்னன் மாநிலத்தை இனித காக்க வருதலால் மாந்தர் அவனை இன்னுயிர்போல் எண்ணி மகிழ்ந்து எவ்வழியும் கண்ணிய மாப் போற்றி வர நேர்ந்தார். அவனுக்கு வாப்க் துள்ள பெயர்கள் யாவும் காரணங்கள் கோப்ந்து பூரண வுரிமைகள் பொருக்தி வந்திருக்கின்றன. அரசன் என்னும் பேர் இனிமை செப்பவன் என்னும் பொருளையுடையது. ரசம் = இனிமை. அதனை இயல்பாக மருவி யுள்ளவன் அரசன் எனவும் இராசன் எனவும் நேர்க்கான். மன்னன்- மாண்புடையவன். வேந்தன்- மேலான ஆணையை விதிப்பவன். கிருபன்- நரர்களின் தலைவன். புரவலன்- புரத்தலில் வல்லவன். பூ பாலன்- பூமியைக் காப்பவன். எங்தல்- எவரினும் உயர்ந்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/339&oldid=1326905" இலிருந்து மீள்விக்கப்பட்டது