பக்கம்:தரும தீபிகை 5.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ ர சு L879 பெருமான்- அரிய பெருமையாளன். காபதி. மனிதரின் அதிபதி. குரிசில்- கருணே தோய்ந்த கவுரவம் நிறைந்தவன். அண்ணல்- அணுகியவரை ஆதரிப்பவன். சக்கிரி- தக்க ஆணை புரிபவன். பார்த்திபன்- உலகத்தை ஆள்பவன். கோ- தலைமையான கிலேயி ைன். பொருகன்- பொருதிறல் வாய்ந்தவன். கொற்றவன்- வெற்றியை விழைபவன், காவலன்- யாவரையும் பாதுகாப்பவன். தலைவன்- உலகில் உயர்ந்தவன். இறைவன்- எங்கும் திறை பெறுபவன். மகிபன்- மகியாளும் மகிமை வாய்ந்தன். இன்னவாறு மன்னிய காரணங்களோடு மன்னன் மான் பமைந்து வந்துள்ளான். உற்ற இயல்புக்குக் கக்கபடி உரிமை கோப்ந்து உறுதி சூழ்ந்து உயர்ந்து நிற்கின்ருன்; காரியம் செய்து வரும் அளவு அ1 சன் சீரியனுப்ச் சிறந்து திகழ்கின்ருன். இக்காட்டு ஆட்சிமுறை மிக்க மாட்சிமை புடையது; எக் காடும் வியக்க புகழ முன்னுள் விளங்கி நின்றது. குடிசனங்கள் மன அமைதியோடு எவ்வழியும் இனிது வாழ்வதையே புனித மான தனது வாழ்வின் பயனக அரசன் கருதி வந்தான். யாதொரு குறையும் யாரிடமும் சேராதபடி நாடி முறைசெய்து வங்கமையால் காடு பீடும் பெருமையும் யாண்டும்பெருகிவந்தது. யாருக்காவது. ஏதேனும் இடையூறு நேர்ந்தால் அகனே விரைவில் வந்து எளிதே தெரிவிக்கும்படி சோழ மன்னன் ஒர் வழிகோலி வைத்திருந்தான். தனது அரண்மனை எதிரே ஒரு மண்டபம் அமைத்து அதன் நடுவே பெரிய மணி ஒன்றைத் தொங்கவிட்டிருந்தான். குறைபாடு நேர்ந்தவர் அந்த மணியை அடிக்கால் அரசன் விரைந்து அவரை அழைத்து வேண்டியதைச் செய்தருளுவன். அவ்வாறு அமைத்த மணி நெடுங்காலமா யாதும் அசையாதிருந்தது. தேசத்தில் யாருக்கும் யாதொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/340&oldid=1326906" இலிருந்து மீள்விக்கப்பட்டது