பக்கம்:தரும தீபிகை 5.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1882 த ரும தீ பி. கை விவிலங்கு நீர் வேலி வாழ்பவர்க்கு ஆவி ஆபவர் அரசர் ஆதலால் காவல் ஒவுங்கொல் என்று கண்படான் மாவல் தானே.அம் மன்னர் மன்னனே. (சூளாமணி) பயாபதி என்னும் அரசனைக் குறித்து இவை வந்திருக்கின்றன. மாங்கரை அவன் பேணி வந்திருக்கும் நீர்மையை உணர்ந்து சீர்மையை வியந்து சிங்தை உவந்து கொள்கிருேம். தன் ஆட்சியில் இருந்த மக்களை மாத்திரமல்ல, மிருகங்களை யும் பறவைகளையும் அரசர் பரிவோடு பாதுகாத்து வந்துள்ளனர் என்பதை முன்னம் குறித்த மன்னவன் சரிகம் நன்கு விளக்கி யுள்ளது. நீதிமுறை நிறைபெருங் தவமாய் நிலவுகின்றது. "வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுர்ே நெஞ்சுசுடத் தான்.தன் அரும்பெறல் புதல்வனே ஆழியின் மடித்தோன்.” (சிலப்பதிகாரம், 20) சோழ மன்னன் புரிந்த அரிய நீதியைப் பாண்டிய மன்னனுக் குக் கண்ணகி இப்படி எடுத்துக் காட்டியிருக்கிருள். இந்த அரசனது நீதி கிலேயைச் சோதிக்க ஈசனும் எமனும் பசுவும் கன்றுமாப் இசைந்து அதிசய நிலையில் அங்கே வந்துள்ளனர். அங்த வுண்மையை அயலே வருவதில் காணலாம். "ஈசன் பசுவாகி ஏமன் ஒரு கன்ருகி விசுபுகழ் ஆரூரின் விதிவந்தார் அம்மானே; விசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாயின் காசளவு பாலும் கறவாதோ அம்மானே? கன்றையுதை காலி கறக்குமோ அம்மானே.” (பசுபதி)

ஈசன் பசு; ஏமன் கன்று; கன்றையுடைய பசு நிறையப் பால் கறக்குமே அவ்வாறு அது கறக்ககோ? இல்லை; ஏன்? கன்றை உதை காலி கறக்குமோ? என்று பதில் வந்துள்ளது. பொருளை உணர்ந்து இதன் சுவையை நுகர்ந்துகொள்ள வேண்டும். கவி யின் சுவையை நுகர்வார் புவியில் அருகியுள்ளனரே! என்று ஒரு கவி மறுகியுள்ளார். சமனே உதைத்த சிவனே இவனது அரச நீதியை உலகம் அறியச் செய்ய அவ்வாறு வந்தருளினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/343&oldid=1326909" இலிருந்து மீள்விக்கப்பட்டது