பக்கம்:தரும தீபிகை 5.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1574. த ரு ம தீபிகை பொன்னும் மணியும் அழுத்திச் செய்தாலும் செருப்பைக் காலில் இட்டே மிதிப்பர்; பொல்லாத கீழ்மக்கள் செல்வம்பெற் ருலும் மதிப்பு அடையார் என இது உணர்த்தியுள்ளது. எட்டி கனி டேட்டினும் கனிவு ஆமோ? என்றது கெட்டவரது கெடுநிலை தெரிய வந்தது. உள்ளம் கொடியவர் இனிய பொருளை அடையினும் இன் தைவராகவே இருப்பர் ஆகலால் அவர் யாண்டும் இழிக்கப்படு வர்; அவரது இருப்பு வெறுப்புக்கே இடமாம். * தன் நெஞ்சில் கொடுமையை வளர்த்து வருபவன் தனக்கு நீசத்தையே வளர்த்து நாசத்தை அடைகிருன்; அவ்வாறு நீச மும் நாசமும் அடையாமல் நல்ல நீர்மையை வளர்த்து நலம் பல பெறுக. இனிய பண்பு பெரிய இன்பம் ஆகின்றது. 665. இனிய உயர்நீர்மை இன்ப அமுதாம் துனிசெய் கொடுமை துயராம்-கனியும் மனத்தின் அளவே மனிதன் மருவி இனத்தின் எழுவன் எதிர். (டு) இ-ள். இனிய நீர்மை அரிய அமுதமாய் இன்பம் தரும்; கொடிய தன்மை நெடிய விடமாய்த் துன்பம் புரியும்,மனத்தின் கனிவின் அளவே மனிதன் இனியனுப் உயர்ந்து விளங்குகிருன் என்க. இனிமை கொடுமை நன்மை தீமை எ ன்னும் மொழிகள் செயல் இயல்களை நோக்கி வெளியாயுள்ளன. எ துவும் தனியாய் வருவதில்லை; வினைகளின் வழியே விளைந்து வருகின்றன. எண்ணிவருகின்ற எண்ணங்கள் இனியனவாயின் அந்த மனிதன் புண்ணியவானுய்ப் பொலிந்து விளங்குகிருன். உள்ளம் இனிமையாப்ப் பழுத்தபொழுது அதிமதுரமான நல்ல திங்கனி போல் எல்லாருக்கும் இன்பம் புரிகின்றன். இனிய நீர்மைகளில் பழகிவருபவன் அமுதமயமாய் அதிசயநிலையை அடைகின்ருன். குணநலங்கள் எவ்வழியும் திவ்விய மகிமைகளை அருளுகின்றன. சான்ருேர்,பெரியோர் என வான்கோப் புகழோடு வயங்கி நிற்பவர்எவரும் இனியபண்பாடுகளில் தனி உயர்ந்தவரே யாவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/35&oldid=1326592" இலிருந்து மீள்விக்கப்பட்டது